தொழில் வளர்ச்சி அடைய சிறப்பு பூஜை.. வீட்டில் மாந்திரீகர் செய்த பயங்கர செயல் - பகீர் தகவல்!
தொழில் வளர்ச்சிக்கு மாந்திரீகத்தை நம்பி அடகுக் கடை உரிமையாளர் லட்சக்கணக்கான ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
சென்னை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் அடகுக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த சிவா என்பவர் மாந்திரீகர் என்று கூறி சமூக ஊடகம் மூலம் அறிமுகமாகி உள்ளார்.மேலும் தொழில் வளர்ச்சிக்காகச் சிறப்புப் பூஜை செய்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும் எனக் ஆசை வார்த்தை கூறி தியாகராஜனை நம்ப வைத்துள்ளார்.
இதனையடுத்து சிவாவின் வார்த்தையை நம்பி 16 லட்ச ரூபாயைக் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் மாந்திரீகர் சிவா கூறிய வாக்குறுதி நிறைவேறாததால், தியாகராஜன் தனது பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.அப்போது பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார்.
இதற்குச் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்குச் தியாகராஜனை மாந்திரீகர் சிவா அழைத்துள்ளார். இதனை நம்பி தியாகராஜன், தனது நண்பர்களுடன் அங்குச் சென்றுள்ளார். அங்குச் சிவா மற்றும் அவரது கூட்டாளிகள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மாந்திரீக மோசடி
திடீரென தியாகராஜன் மற்றும் அவரது நண்பர்களைச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும் அவர்களிடம் இருந்து ₹3.7 லட்சம் மற்றும் மூன்று சவரன் செயினை பறித்துச் சென்றனர்.இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் தியாகராஜன் புகாரி அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் குற்றம்சாட்டப்பட்ட சிவாவின் கூட்டாளிகளான மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மேலும் தலைமறைவாக உள்ள சிவாவைத் தேடி வருகின்றனர்