இன்ஸ்டாகிராம் பழக்கம்.. 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - 16 வயது சிறுவன் செய்த கொடூரம்!
10 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
10 வயது சிறுமி
குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தில் வசித்து வந்த ஒருவர் 5-ம் வகுப்பு படிக்கும் மகள் கடத்தப்பட்டதாகப் புகார் ஒன்றை அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதில், தாயாரின் மொபைல் போனில் சிறுமி இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இதில், 16 வயது சிறுவன் ஒருவனுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து இருவரும் சாட்டிங் செய்ததுடன், கைப்பேசியிலும் பேசி வந்துள்ளனர் .
இன்ஸ்டாகிராம்
இந்நிலையில், சிறுமியைக் கடத்தி சென்ற அந்த சிறுவன், வீட்டுக்குக் கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்தது காவல் துறையின் விசாரணையில் தெரிவித்தனர்.அதுமட்டுமில்லாமல் அவர்கள் 7 கணக்குகளை உருவாக்கி உள்ளனர் .
அதில் 2 மட்டும் செயல்பாட்டிலிருந்துள்ளது.இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் கண்டறிந்து கைது செய்தனர். அதன் பிறகு மெஹ்சானா பகுதியில் உள்ள சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.