மூத்த சகோதரி மீது அதிக பாசம்.. தாயை வெட்டிக் கொலை செய்த மகள் - பகீர் பின்னணி!
சகோதரி மீது அதிக அன்பு செலுத்திய தாயை மகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் சபீரா பானு ஷேக் (71). கணவரை இழந்த இவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சபீரா பானு ஷேக்கிற்கும் இவரது 41 வயது மகள் ரேஷ்மா முஃபர் காசிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ரேஷ்மா முஃபர் வீட்டில் உள்ள சமையலறையில் உள்ள காய்கறி வெட்டும் கத்தியால் தாய் சபீராவை வயிறு, மார்பு, கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் சரமாரியாகக் குத்தி கொலை செய்துள்ளார்.
சபீராவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.அப்போது .சபீரா ரத்த வெள்ளத்தில் சரிந்து சடலமாகக் கிடந்தார். மேலும் இது குறித்து சுனாபாட்டிகாவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கொலை
புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சபீரா பானுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் ரேஷ்மா முஃபர் காசியைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.அதில் தனது மூத்த சகோதரியை அவர்களின் தாய் அதிகமாக நேசிப்பதாக நினைத்து பொறாமை கொண்டுள்ளார். இதனால் தாயைக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.