முன்னாள் மனைவியின் அதிர்ச்சி வீடியோ..கதறிய பவன் கல்யாண்- நடந்தது என்ன ?
பவன் கல்யாணின் முன்னாள் மனைவியின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பவன் கல்யாண்
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணியில் அமோக வெற்றிபெற்றது. இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார். துணை முதலமைச்சராகப் பவன் கல்யாண் பதவியேற்றுள்ளார்.
பவன் கல்யாண் முதல் 2 மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில் தற்போது மூன்றாவது மனைவியான அன்னா லெஷ்னேவா என்பவருடன் உடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் பவன் கல்யாணின் முன்னாள் மனைவியின் இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
எனக்கும் தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்!! 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி!!
இன்ஸ்டா பதிவு
கடந்த 2009 ஆம் ஆண்டு ரேணு தேசாய் என்பவரைப் பவன் கல்யாண் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா நந்தன் மற்றும் ஆத்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். பின்னர் 2012 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் சமீபகாலமாக இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்ஸ்டாவில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில்“நவீன மருந்துகள் உடலை உயிருடன் வைத்திருக்கின்றன. எதுவாக இருந்தாலும் நாம் வலுவாக இருக்க வேண்டும். உங்கள் மீதும் வாழ்க்கையிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள். இந்த பிரபஞ்சம் நமக்காக அதன் இனிமையான திட்டங்களைக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.