எனக்கும் தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்!! 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி!!

Pawan Kalyan Marriage Divorce
By Karthick Jun 09, 2024 06:39 AM GMT
Report

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு அரசியலின் மிக முக்கிய புள்ளியாக மாறியுள்ளார்.

பவன் கல்யாண்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் பவன் கல்யாண். பவர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் என அவர், தனது கவனத்தை திரைத்துறையில் இருந்து அரசியல் பக்கம் திரும்பியுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்த பவன் கல்யாண், தான் போட்டியிட்ட 21 சட்டமன்ற இடங்கள் 2 மக்களவை இடங்கள் என அனைத்திலும் வெற்றி வாகை சூடியுள்ளார்.

எனக்கும் தாம்பத்திய வாழ்க்கை வேண்டும்!! 2-ஆம் திருமணத்திற்கு ரெடியான பவன் கல்யாணின் முன்னாள் மனைவி!! | Pawan Kalyan Ex Wife Renu Desai Wants Marriage

தெலுங்கு திரையுலகமே அவர் கொண்டாடி வரும் நிலையில், பவன் கல்யாண் குறித்த செய்திகள் பல வெளியாகி கொண்டே இருக்கின்றன. தெரியாதவர்களுக்கு பவன் கல்யாண் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி. இவருக்கு இதுவரை 3 முறை திருமணங்கள் நடைபெற்றுள்ளன. முதலில் நந்தினி என்பவரை 1997-இல் பவன் கல்யாண் திருமணம் செய்து கொண்ட, அவருடன் திருமணத்தில் இருந்த போதே பிரபல தெலுங்கு நடிகை ரேனு தேசாய்யுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டார்.

Pawan Kalyan Modi

முதல் விவாகரத்திற்கு பிறகு, 8 வருடம் சேர்ந்த வாழ்ந்த ரேணு தேசாய்'யை 2009-இல் திருமணம் செய்து கொண்டு , அவரையும் 2012-இல் விவாகரத்து செய்தார். தற்போது ரஷ்யா நாட்டை சேர்ந்தவரான அன்னா லெஷ்னேவா என்பவரை 3-வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

Pawan Kalyan Renu Desai

பவன் கல்யாணியுடனான விவாகரத்திற்கு பிறகு இரண்டாம் திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ரேணு தேசாய் அதனை ரத்து செய்து தனியாக கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக குழந்தைகளின் வளர்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

2-வது திருமணம் 

இவர் அண்மையில் அளித்த பேட்டி தற்போது மீண்டும் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.

Renu Desai

தான் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக கூறி, நிச்சயமாக 2ஆம் திருமணம் செய்து கொள்வேன் என்றார். இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளில் திருமணம் செய்வேன் என்ற ரேணு தேசாய் தன் குழந்தைகளுக்கு ஒரு பராமரிப்பாளர் தேவைப்பட்டதன் காரணமாக, திருமணம் செய்து கொண்டால் கணவருடன் நேரத்தை செலவிட வேண்டியிருக்கும் என்பதால் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்ததாக தெரிவித்தார்.

ஆந்திரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் பவன் கல்யாண் கூட்டணி - தோல்வி முகத்தில் ஜெகன்?

ஆந்திரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் பவன் கல்யாண் கூட்டணி - தோல்வி முகத்தில் ஜெகன்?

இன்னும் சில ஆண்டுகளில் குழந்தைகள் வளர்ந்து கல்லூரிக்கும் சென்றுவிடுவார்கள் என்றும் அப்போது நண்பர்கள் காதலர்கள் என்று புதிய உலகம் கிடைக்கும் என்ற ரேணு தேசாய் அப்போது தான் சுதந்திரமாக இருப்பேன் என்றும் தெரிவித்தார்.

Pawan Kalyan Renu Desai

திருமணத்தை தான் அனுபவிக்க முடியும் என தெரிவித்து அதற்காகவே இத்தனை ஆண்டுகளாக காத்திருக்கிறேன் என்றும் எனக்கும் திருமண வாழ்க்கை, எல்லா தாம்பத்திய வாழ்க்கையையும் அனுபவிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.