ஆந்திரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் பவன் கல்யாண் கூட்டணி - தோல்வி முகத்தில் ஜெகன்?
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ள சட்டமன்ற தேர்தல் முடிவுகள் ஜன சேனா கட்சிக்கு ஆதரவாக முடிந்துள்ளதாக தெரிகிறது.
ஆந்திரப்பிரதேசம்
சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஆந்திர மாநிலத்தின் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே 13-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பவன் கல்யாணின் ஜன சேனா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கட்சிகளும், எதிர்த்து தனித்து போட்டியிட்டுள்ளது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்.
முன்னிலையில் பவன் கூட்டணி
மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளின் தற்போது வரை வெளியான முன்னிலை விவரங்களில் 40'இல் பவன் கல்யாண் கூட்டணியும், 9'இல் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன.
கடந்த முறை தேர்தலில் படுதோல்வியடைந்த ஜன சேனா கட்சி இம்முறை அதிக இடங்களை கைப்பற்றும் என நம்பப்படுகிறது.
முன்னிலை விவரங்களும் அதையே காட்டுகின்றன.
அதே போல, 25 இடங்களுக்கான மக்களவை தேர்தலில் 11 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.