“யோகி ஆதித்யநாத் போல இருக்க வேண்டும்” - உள்துறை பதவிக்கு ஸ்கெட்ச் போடும் பவன் கல்யாண்?
யோகி ஆதித்யநாத் போல நாம் இருக்க வேண்டும் என பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாண்
காக்கிநாடா, பிதாபுரம் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கந்து கொண்டு பேசிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்,
“உள்துறை அமைச்சர் அனிதாவிடமும் சொல்கிறேன். நீங்கள் உள்துறை அமைச்சர். நான் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும், வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் இருக்கிறேன். உங்கள் கடமைகளை சரியாக செய்யுங்கள் அல்லது உள்துறை அமைச்சகத்தையும் நானே எடுத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
கலையும் கூட்டணி?
நீங்கள் யோகி ஆதித்யநாத் போல் இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள், எம்எல்ஏக்கள் வெறும் ஓட்டு கேட்க மட்டுமே அல்ல. உங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. அனைவரும் யோசிக்க வேண்டும். உள்துறை அமைச்சகத்தை யாரும் எதுவும் கேட்கமுடியாது என்றெல்லாம் கிடையாது.
நான் செய்தால், நாம் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் போல் இருக்க வேண்டும். இல்லையெனில் இங்கு எதுவும் மாறாது. எனவே நீங்கள் மாறுவீர்களா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பவன் கல்யாணின் பேச்சு கூட்டணி சிதைவதற்கான அறிகுறியா என்று இணையத்தில் விவாதங்கள் எழுந்துள்ளது.