விளம்பரத்தால் பெரும் சர்ச்சை - மன்னிப்பு கோரிய பதஞ்சலி நிறுவனம்!
விளம்பர விவகாரத்தில் ஆச்சார்யா பாலகிருஷ்ணா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
பதஞ்சலி
பாபா ராம்தேவின் சொந்த நிறுவனம் பதஞ்சலி. இந்த நிறுவனத்தின் மூலமாக பற்பசை, தேன், நூடுல்ஸ், கூந்தர் தைலம், சமையல் எண்ணை, சோப்பு, உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், அலோபதி மருத்துவ முறைக்கு எதிரான கருத்துக்களை உள்ளடக்கியும் விளம்பரங்கள் வெளியாகின இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மருத்துவ சங்கம் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணையில், எந்தவொரு தவறான விளம்பரங்களையும் செய்ய வேண்டாம்.
மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இருப்பினும் கடந்த 4 மாதங்களாக பதஞ்சலி இதுபோன்ற விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த நிலையில் இந்த வழக்கு கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நீதிமன்றத்தில் மன்னிப்பு
அதில், யோகா குரு ராம்தேவ் மற்றும் அந்நிறுவன நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், வறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட விவகாரத்தில் ஆச்சார்யா பாலகிருஷ்ணா உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "எதிர்காலத்தில் இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறோம். ஆயுர்வேத நிறுவனத்தின் தயாரிப்புகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இந்த நாட்டின் குடிமக்களை ஊக்குவிப்பதே தங்களின் நோக்கம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.