மகனை நம்பிய பெற்றோர்.. மனைவியின் கழுத்தில் என்ன அது? வசமாக சிக்கிய பாதிரியார்!

Tamil nadu Chennai Crime Death
By Jiyath May 01, 2024 06:57 AM GMT
Report

மனைவியை கொலை செய்து நாடகமாடிய பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். 

மனைவி கொலை 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே குணாபா பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் விமல் ராஜ் (35). இவருக்கும் அதே மிகுதியை சேர்ந்த வைஷாலி என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

மகனை நம்பிய பெற்றோர்.. மனைவியின் கழுத்தில் என்ன அது? வசமாக சிக்கிய பாதிரியார்! | Pastor Arrested For Killing His Wife In Chennai

இந்த தம்பதிக்கு 1 வயதில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறார். விமலராஜ் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த பொன்மார் பகுதியில் அட்வென்ட் கிறிஸ்துவ சபையின் துணை பாதிரியாராக பொறுப்பேற்று இங்கு குடியேறினார்.

இதனிடையே கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சென்னை ஒட்டியம்பாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு விமல் ராஜ் வந்துள்ளார். அப்போது "தனது மனைவி வைஷாலி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது உயிரிழந்தார்.

இன்ஸ்டாகிராமில் 20.. நேரில் 45; பார்த்ததும் பதறியடித்து ஓடிய வாலிபர் - என்ன நடந்தது?

இன்ஸ்டாகிராமில் 20.. நேரில் 45; பார்த்ததும் பதறியடித்து ஓடிய வாலிபர் - என்ன நடந்தது?

நாடகமாடிய பாதிரியார் 

இதனால் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டதாக" விமலராஜ் கூறியுள்ளார். இதனை நம்பிய அவரது பெற்றோர் உடலை வீட்டில் வைத்து வைஷாலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

மகனை நம்பிய பெற்றோர்.. மனைவியின் கழுத்தில் என்ன அது? வசமாக சிக்கிய பாதிரியார்! | Pastor Arrested For Killing His Wife In Chennai

இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை வந்த அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் வைஷாலியின் கழுத்தில் காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுகுறித்து தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் விமல் ராஜை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், திருமணம் ஆனதிலிருந்து தங்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், தகராறு முற்றியதில் அவரை அடித்து கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து நெரித்து கொலை செய்ததாகவும், கொலையை மறைத்து உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக கூறி நாடகமாடியதாகவும் பாதிரியார் விமல் ராஜ் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் விமல் ராஜை கைது செய்தனர்.