3D-யில் திருமண உடை - WWE வீராங்கனையை மணந்த இந்திய வம்சாவளி பில்லியனர்!

United States of America India Marriage
By Jiyath Apr 30, 2024 06:40 AM GMT
Report

இந்திய வம்சாவளி பில்லியனரான அங்கூர் ஜெயினின் திருமணம் பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

பிரம்மாண்ட திருமணம் 

பில்ட் ரிவார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அங்கூர் ஜெயின். இவருக்கும் முன்னாள் WWE வீராங்கனை எரிகா ஹம்மண்ட் என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

3D-யில் திருமண உடை - WWE வீராங்கனையை மணந்த இந்திய வம்சாவளி பில்லியனர்! | Billionaire Ankur Jain Wwe Erika Hammond Wedding

இவர்களது திருமணம் பண்டைய பிரமிடுகளின் பின்னணியில் நடந்தது. இவர்களது திருமணத்தின் முக்கிய சிறப்பம்சமாக மணமகள் எரிகாவின் ஆடை இருந்தது. ஹார்ட் நெக்லைன் மற்றும் உடலுடன் ஒட்டிய தங்க நிறமுள்ள ஸ்ட்ராப்லெஸ் கவுனை அவர் அணிந்திருந்தார்.

பூனையால் நேர்ந்த விபரீதம்.. தீப்பற்றி எரிந்த வீடு - ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

பூனையால் நேர்ந்த விபரீதம்.. தீப்பற்றி எரிந்த வீடு - ரூ.11 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்!

3டி-யில் உடை

இதில் மேலும் சிறப்பு என்னவென்றால், அந்த கவுன் முழுவதும் இருந்த தங்க மலர்கள் 3டி-யில் செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த ஆடையில் 3டி ஷிம்மர்களும் இருந்தது பார்ப்பவர்களின் கண்களை கவர்ந்தது. இந்த சிறப்பு ஆடை நடனமாடும் மயில் என்ற தீமில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

3D-யில் திருமண உடை - WWE வீராங்கனையை மணந்த இந்திய வம்சாவளி பில்லியனர்! | Billionaire Ankur Jain Wwe Erika Hammond Wedding

திருமணத்தின் போது பிரத்தியேகமாக டிசைன் செய்யப்பட்ட வைர நகைகளை எரிகா அணிந்திருந்தார். இந்த நகைகளை செய்ய 2 மாதங்கள் ஆகியுள்ளது. இந்திய வம்சாவளியின் இந்த பிரம்மாண்ட திருமணம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.