பாரிஸ் ஒலிம்பிக்; வெறும் 0.005 நொடிகள் தான் - தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்கா வீரர்
100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்கா வீரர் நோவா லைல்ஸ் 0.005 நொடிகள் வித்தியாசத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
100 மீட்டர் ஓட்டம்
2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் அமெரிக்காவின் நோவா லைல்ஸ், ஜமைக்காவின் கிஷேன் தாம்சன், அமெரிக்காவின் கென்னத் பெட்னரெக், ஃப்ரெட் கெர்லி, தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன், இமைக்காவின் செவில், போட்ஸ்வானாவின் டிபோகோ மற்றும் இத்தாலியின் ஜாகப்ஸ் களம் இறங்கினர்.
0.005 நொடி
இதில் முதல் 30 மீட்டர் வரை நோவா லைல்ஸ் 8 வது இடத்தில் தான் இருந்தார். ஜமைக்காவின் தாம்சன் முன்னிலையில் இருந்தார்.ஆனால் 50 மீட்டருக்கு பின் நோவா லைல்ஸ் முன்னேற தொடங்கினார்.இறுதியில் நோவா லைல்ஸ், தாம்சன், கெர்லி ஆகியோர் ஒரே நொடியில் இலக்கை எட்டியதை போல் தெரிந்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாது வீரர்களும் யாருக்கு பதக்கம் என குழப்பத்தில் இருந்தனர்.
இறுதியாக அமெரிக்க வீரர் நோவா லைல்ஸ் 9.784 வினாடிகளில் எல்லையை கடந்தார். ஜமைக்காவின் கிஷான் தாம்சன் 9.789 வினாடிகளில் எல்லையை கடந்தார். நோவா லைல்ஸ், தாம்சனை விட 0.005 நொடிகள் முன்னே சென்று தங்கப்பதக்கம் வென்றார்.