விண்வெளியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி - அசத்தும் விண்வெளி வீரர்கள்

NASA Paris 2024 Summer Olympics
By Karthikraja Jul 28, 2024 02:29 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

ஒலிம்பிக் போட்டி

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

paris olympics 2024

இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்குகிறார்கள். இந்தியா சார்பாக 16 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

பாரிஸ் ஒலிம்பிக் ; முதல் பதக்கத்தை தட்டி தூக்கிய இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக் ; முதல் பதக்கத்தை தட்டி தூக்கிய இந்தியா

விண்வெளி நிலையம்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் போட்டி உலக அளவில் கவனம் பெற்றுள்ளதோடு, பூமியை தாண்டி விண்வெளியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுனிதா வில்லியம்ஸ் உட்பட பல்வேறு விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி பணிகளுக்காக தங்கியுள்ளனர். இந்த நிலையில், இவர்கள் விண்வெளி மையத்தில் குட்டி ஒலிம்பிக் என அவர்கள் விளையாடும் வீடியோ நாசாவால் வெளியிடப்பட்டுள்ளது. 

விண்வெளியில், புவியீர்ப்பு விசை இல்லாததால் அங்கு எடையுள்ள ஒரு பொருளை நகர்த்துவது மிகவும் சுலபம். எனவே அவர்கள் எளிதாக பளுதூக்குதல், மற்றவர்களை தூக்குவது, குண்டு எறிதல் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை பார்க்க முடிந்தது.