பாரிஸ் ஒலிம்பிக் ; முதல் பதக்கத்தை தட்டி தூக்கிய இந்தியா

India Paris 2024 Summer Olympics
By Karthikraja Jul 28, 2024 10:44 AM GMT
Report

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

ஒலிம்பிக்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். 2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

paris olympic 2024 india

இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்குகிறார்கள். இந்தியா சார்பாக 16 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். 

நாளை தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்; போட்டியை எப்படி பார்ப்பது?

நாளை தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்; போட்டியை எப்படி பார்ப்பது?

மனு பாக்கர்

இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீராங்களை மனு பாக்கர். இதையடுத்து ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் மனு பாக்கர். ஏர் பிஸ்டல் பிரிவில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கிடைத்துள்ள பதக்கம் இதுவாகும். கடைசியாக 2012 லண்டன் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்தது.

manu Bhaker india olympics

வெற்றிக்கு பிறகு பேசிய மனு பாகர், "துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு கிடைத்த பதக்கம் இது. இதனை சாத்தியப்படுத்த நான் ஒரு கருவியாக இருந்தேன். இந்தியா இன்னும் அதிகமான பதக்கங்களுக்குத் தகுதியானது. இந்த முறை அதிக பதக்கங்களை இந்தியா வெல்லும் என எதிர்நோக்குகிறோம். தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை கனவில் இருப்பதை போன்ற உணர்வு உள்ளது. நான் நிறைய முயற்சி செய்தேன். கடைசி ஷாட் வரை கூட எனது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி போராடினேன். வெண்கலம் கிடைத்தது. அடுத்த முறை சிறப்பாக அமையும் என நம்புகிறேன்" என பேசியுள்ளார்.

பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரௌபதி மர்மு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.