நாளை தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்; போட்டியை எப்படி பார்ப்பது?

India Paris Paris 2024 Summer Olympics
By Karthikraja Jul 25, 2024 10:07 AM GMT
Report

 நாளை 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டி தொடங்க உள்ளது.

ஒலிம்பிக்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படுவது ஒலிம்பிக் போட்டி முதலில் கிமு 8 ம் நூற்றாண்டு ஒலிம்பியா என்னும் இடத்தில் தொடங்கியது. 

2024 paris olympics

நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி நாளை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்கி ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்குகிறார்கள். 

முதல்முறையாக இந்தியாவிற்காக - அம்பானி மனைவி பாரிஸில் செய்த காரியம் என்ன தெரியுமா?

முதல்முறையாக இந்தியாவிற்காக - அம்பானி மனைவி பாரிஸில் செய்த காரியம் என்ன தெரியுமா?

தொடக்க விழா

வழக்கமாக மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழா இந்த முறை செய்ன் நதியில் நடைபெற உள்ளது. இதில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு படகுகள் அணிவகுப்பு நடக்கிறது. இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு நாடுகளையும் சேர்ந்த வீரர்கள் படகுகளில் தங்கள் தேசிய கொடியுடன் நின்று கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியா சார்பாக பி.வி.சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் தேசியக் கொடியை ஏந்த உள்ளனர். 

2024 paris olympics opening cermony

இதில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பதக்கத்துடன் சேர்த்து 50,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 42 லட்சம்) பரிசுத் தொகை வழங்கப்படும் என உலக தடகள அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தியா

பிரம்மாண்டமாக நடக்க உள்ள தொடக்க விழா இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 24 தொலைக்காட்சி நிறுவனம் நேரலை செய்யவுள்ளது. மேலும் ஜியோ சினிமாஸ் நிறுவனமும் ஒலிம்பிக் போட்டிகளை நேரலை செய்யவுள்ளது. மொபைல் பயன்படுத்துவர்கள் ஜியோ சினிமாஸ் செயலி மூலம் இலவசமாக நேரலையில் பார்க்க முடியும்.

இந்தியா 1900 ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. தற்போது வரை மொத்தமாக 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம் என 36 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்த முறை இந்தியா சார்பாக 16 விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க 117 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதனால் இந்த முறை நிச்சயம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.