முதல்முறையாக இந்தியாவிற்காக - அம்பானி மனைவி பாரிஸில் செய்த காரியம் என்ன தெரியுமா?

India Paris Paris 2024 Summer Olympics Nita Ambani
By Karthikraja Jun 27, 2024 07:11 AM GMT
Report

 இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்

ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சார்பில் 102 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 

paris olympic latest photos

ஒலிம்பிக் போட்டியின்போது ஒவ்வொரு நாட்டின் வீரர்கள் தங்குவதற்காகவும், அந்த நாட்டை சேர்ந்த விஐபிக்கள் வருகை, கலாசாரத்தை பறைசாற்றும் கண்காட்சி, பார்வையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்காக ஒவ்வொரு நாடுகளும் இல்லம் ஒன்றை அமைக்கும். 

அடேங்கப்பா..அம்பானி மருமகளுக்கு இப்படி ஒரு பரிசா? தலைசுற்ற வைக்கும் சிறப்பம்சங்கள்!

அடேங்கப்பா..அம்பானி மருமகளுக்கு இப்படி ஒரு பரிசா? தலைசுற்ற வைக்கும் சிறப்பம்சங்கள்!

நீடா அம்பானி

இந்நிலையில் இந்தியா முதல் முறையாக தனது இல்லத்தை (இந்தியா ஹவுஸ்) பாரீஸ் ஒலிம்பிக் வளாகத்தில் அமைக்கவுள்ளது. இதற்கான ஏற்பாட்டை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை மேற்கோள்கிறது. 

nita ambani paris olympics

இது குறித்து இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினரும், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவருமான நீடா அம்பானி கூறியதாவது, ஒலிம்பிக் இயக்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான 140 கோடி இந்தியர்களின் கனவை நிறைவேற்றுவதற்கு இந்தியா ஹவுஸ் மேலும் ஒரு படியாக இருக்கும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். 

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறுகையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா ஹவுஸ் முக்கிய இடமாக இருக்கும். இந்தியாவைப் பற்றியும் அதன் சிறப்பு என்ன என்பதைப் பற்றியும் மற்ற நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும் மக்களும் தெரிந்துகொள்ள இது ஒரு சிறந்த வழியாகும். மேலும், இந்த முயற்சியையும், இந்தியாவின் ஒலிம்பிக் இயக்கத்தையும் முன்னெடுத்துச் சென்றதற்காக ஐஓசி உறுப்பினர் நீடா அம்பானிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என தெரிவித்துள்ளார்.