அடேங்கப்பா..அம்பானி மருமகளுக்கு இப்படி ஒரு பரிசா? தலைசுற்ற வைக்கும் சிறப்பம்சங்கள்!

Dubai India Mukesh Dhirubhai Ambani Nita Ambani
By Swetha May 25, 2024 12:00 PM GMT
Report

அம்பானி குடும்பத்தின் மருமகளாக உள்ள ராதிகா மெர்சன்ட்க்கு ஆடம்பர வில்லா பரிசளிக்கப்பட்டுள்ளது.

அம்பானி மருமகள்

உலகின் முக்கிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று,திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் சில மாதங்கள் முன்பு கலைக்கட்டின. நாட்டின் முக்கிய தலைப்புச்செய்தி அது தான்.

அடேங்கப்பா..அம்பானி மருமகளுக்கு இப்படி ஒரு பரிசா? தலைசுற்ற வைக்கும் சிறப்பம்சங்கள்! | Nita Ambanis Gifts Luxury Villa For Radhika

3 நாட்கள் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற இவ்விழாவில் பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி உலகின் பல முக்கிய நட்சத்திரங்களும் பங்கேற்று கொண்டனர். முதல் நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில், தற்போது 2-வது திருமண விழா கொண்டாட்டங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

அடேங்கப்பா...உல்லாச கப்பலில் 800 விருந்தினர்களா? நடுக்கடலில் அம்பானி மகன் திருமண விழா!

அடேங்கப்பா...உல்லாச கப்பலில் 800 விருந்தினர்களா? நடுக்கடலில் அம்பானி மகன் திருமண விழா!

அன்பு பரிசு

ஜூலை 12ம் தேதி நடைபெறும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு மே28ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. இதற்காக உல்லாச கப்பல் ஒன்று 800 விருந்தினர்களுடன் இத்தாலியில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் சென்றடைகிறது.

அடேங்கப்பா..அம்பானி மருமகளுக்கு இப்படி ஒரு பரிசா? தலைசுற்ற வைக்கும் சிறப்பம்சங்கள்! | Nita Ambanis Gifts Luxury Villa For Radhika

அம்பானி குடும்பத்தின் மருமகளுக்கு நீடா அம்பானி விலையுயர்ந்த சொகுசு வில்லா ஒன்றை பரிசளித்துள்ளார். துபாயில் உள்ள இந்த வில்லாவின் மதிப்பு சுமார் ரூ. 640 கோடி என்று வாய்பிளக்க வைத்துள்ளது. இதில் 10 ஆடம்பர படுக்கையறைகள் இருக்கிறது. வில்லாவிற்கு வெளியே சுமார் 70 மீட்டர் தூரத்திற்கு பிரைவேட் கடற்கடையும் உள்ளது.

வில்லாவின் மற்றொரு சிறப்பம்சம் இத்தாலிய பளிங்கு கற்களுடன் பிரமிக்க வைக்கும் அதன் உட்புற வேலைப்பாடுகள்.விடுமுறை காலங்களில் பொழுதைக் கழிக்கவும், பெரியளவிலான பார்ட்டிகளை நடத்தவும் இந்த வில்லா ஏற்றதாக இருக்கும். வர இருக்கும் மருமகளுக்காக அம்பானி குடும்பம் பார்த்து பார்த்து வாங்கியுள்ள இந்த வில்லா தான் இப்போது நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.