அடேங்கப்பா...உல்லாச கப்பலில் 800 விருந்தினர்களா? நடுக்கடலில் அம்பானி மகன் திருமண விழா!
தொழிலதிபர் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்டின் திருமண விழா திட்டம் வெளியாகியுள்ளது.
அம்பானி மகன்
உலக அளவில் 11வது பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. சுமார் 9,43,091 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார். முக்கிய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது.
திருமன முந்தைய சடங்குகள் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் நடைபெற்றது. 1000 ஏக்கர் பரப்பளவில் காடு, புனரமைக்கப்பட்ட சாலைகள், சுமார் 2,500 உணவு வகைகள் என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த திருமண விழாவில் பங்கேற்க ஷாருக்கான், சல்மான் கான், அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் உலகின் பல முக்கிய பிரமுகர்களும், விளையாட்டு வீரர்களும், சினிமா நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
திருமண விழா
முன்னதாக இதைவிட இன்னும் பிரம்மாண்டமாக லண்டனில் ரூ.592 கோடி மதிப்பிலான அம்பானிக்கு சொந்தமான ஸ்டோக் பார்க் எஸ்டேட் ஹோட்டலில் தான் திருமணம் நடக்க இருக்கிறது என சொல்லப்பட்டது. ஆனால் அதை அம்பானி குடும்பம் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில்,
அங்கு பிரபலங்களுக்கான மதுபான விருந்தும் இசை நிகழ்ச்சியும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.வருகின்ற ஜூலை மாதம் நடைபெறும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு மே28ம் தேதியில் இருந்து துவங்குகிறது.அதற்காகவே இத்தாலியில் இருந்து உல்லாசக் கப்பல் ஒன்று புறப்பட்டு பிரான்ஸ் சென்றடைகிறது.
இதன் பயண தூரம் மட்டும் 4380 கிமீ என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட 800 பேர் இந்தக் கப்பலில் பயணிக்கின்றனர். இவர்களை கவனிக்க கப்பலில் 600 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். திருமணக் கொண்டாட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.