ஆசியா முதல் மெக்சிகோ வரை; 3 நாட்களில் 2,500 விதமான உணவு - மெனுவை பார்த்தீங்களா?

Gujarat Mukesh Dhirubhai Ambani Marriage
By Sumathi Feb 28, 2024 09:52 AM GMT
Report

ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு பிரம்மாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனந்த் - ராதிகா

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

anant ambani - radhika

இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத்தின் ஜாம் நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிகழ்வில், இவர்களின் திருமணத் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனந்த் அம்பானி - ராதிகா; நிச்சயதார்த்த மோதிரம் கொண்டுவந்த நபர் - குடும்ப அதிர்ஷ்டசாலியாம்!

ஆனந்த் அம்பானி - ராதிகா; நிச்சயதார்த்த மோதிரம் கொண்டுவந்த நபர் - குடும்ப அதிர்ஷ்டசாலியாம்!


மெனு லிஸ்ட்

பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் 2500 வகையான உணவு வகைகள் தயார் செய்யப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தூரில் இருந்து தலைசிறந்த சமையல் கலைஞர்கள் 25 பேர் தலைமையிலான குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

ambani family

தாய்லாந்து, மெக்சிகோ, ஜப்பான் என பல்வேறு நாடுகளின் உணவு வகைகள் பரிமாறப்படவுள்ளன. காலை உணவுக்கு மட்டும் 70 வகையான உணவுகள். மதிய விருந்தில் 250 உணவு வகைகள். 85 வகை உணவுகளுடன் நள்ளிரவு உணவு வகைகள். நள்ளிரவு ஸ்நாக்ஸ் வகைகளும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பில் கேட்ஸ், மெலிண்டா கேட்ஸ் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவிருக்கின்றனர். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர் பெர்க் முதல், சர்வதேச விளையாட்டு நட்சத்திரங்கள் வரை ஏராளமானோர் கலந்துக்கொள்ளவுள்ளனர்.