ஆனந்த் அம்பானி - ராதிகா; நிச்சயதார்த்த மோதிரம் கொண்டுவந்த நபர் - குடும்ப அதிர்ஷ்டசாலியாம்!
ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்சன்ட்டின் நிச்சயதார்த்த மோதிரம் கொண்டுவந்த நபர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஆனந்த் - ராதிகா
உலக அளவில் 11வது பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி. சுமார் 9,43,091 கோடி ரூபாய் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸில் நடைபெற உள்ளது. அதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. அது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், நிச்சயதார்த்த மோதிரத்தை எடுத்து வரும் நபரை ஆனந்தின் சகோதரி ஈஷா அம்பானி அறிமுகப்படுத்துகிறார்.
அதிர்ஷ்டசாலி நபர்
அவருடைய செல்ல வளர்ப்பு நாய் அந்த மோதிரத்தை கொண்டு வருகிறது. அந்த நாயின் கழுத்தில் சிவப்பு நிறத்தில் துணி கட்டப்பட்டுள்ளது. அந்த நாய் மேடைக்கு வந்ததுமே அந்த துணியில் இருந்த மோதிரத்தை ஆனந்த் அம்பானி எடுத்து ராதிகாவின் விரலில் போட்டு விடுகிறார்.
அது போல் ராதிகாவும் ஆனந்த் கை விரலில் போட்டு விடுகிறார். இதைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி, நீடா அம்பானி உள்ளிட்டோர் நடனமாடுகிறார்கள். அவர்களது செல்லப் பிராணிதான் குடும்பத்தில் அதிர்ஷ்டசாலியாக கருதப்படுகிறதாம்.