தற்கொலை செய்து இறந்த 16 வயது சிறுமி; உடலை விற்ற பெற்றோர் - பகீர் பின்னணி!

China Marriage Death
By Sumathi Dec 02, 2023 05:43 AM GMT
Report

இறந்த சிறுமியின் உடலை பெற்றோர் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த சிறுமி

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சன். இவரது மகள் சியாடன்(16). இவர் 9வது மாடி வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக சன்னும் அவரது மனைவியும் சியாடனை தத்து கொடுத்துள்ளனர்.

parents-sold-daughter-s-dead-body

ஏற்கனவே இரட்டை குழந்தைகள் இருந்ததால் அவளை வளர்க்க முடியவில்லை எனத் தெரிவித்து தத்தெடுத்த குடும்பத்தினரின் உறவினர்கள் போல சியாடனை அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.'

இறந்த சடலங்களுடன் திருமணம் - நடுங்க வைக்கும் வினோத சடங்கின் பின்னணி

இறந்த சடலங்களுடன் திருமணம் - நடுங்க வைக்கும் வினோத சடங்கின் பின்னணி

பேய் திருமணம்

இந்நிலையில், வளர்ப்பு பெற்றோர்கள் சியாடன் இறப்பிற்கு பின் இளைஞர் ஒருவருடன் அவருக்கு திருமணம் செய்துள்ளனர். மேலும், இதற்காக 66,000-யுவான் (7.75 லட்சம்) பெற்றுள்ளனர். பேய் திருமணங்கள் சீனாவில் 3,000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளன.

china

குடும்ப வன்முறை மற்றும் சடலங்களை இழிவுபடுத்தியதற்காக வளர்ப்பு பெற்றோரை தண்டிக்குமாறு சன் போலீசாரிடம் புகாரளித்தார். ஆனால், பேய் திருமணங்களில் ஈடுபடுபவர்களை தண்டிக்க சட்டப்பூர்வ காரணங்கள் இல்லை என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.