இறந்த சடலங்களுடன் திருமணம் - நடுங்க வைக்கும் வினோத சடங்கின் பின்னணி
இறந்தவர்களுக்கு திருமணம் செய்யும் சடங்கு பதைபதைக்க வைக்கிறது.
பேய் திருமணம்
சீனாவில், இறந்த மனிதருக்கு மற்றொரு பிணத்துடன் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. சில நேரங்களில் இறந்த ஆணுக்கு உயிருடன் இருக்கும் பெண்ணுடனும் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. மிங்குன் என்று அறியப்படும் அந்த பாரம்பரிய சடங்கை பேய் திருமணம் என அழைக்கின்றனர்.
வாழ்ந்த போது திருமணம் செய்துகொள்ளாதவர்கள் மரணத்துக்கு பின்னரும் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக மக்கள் நம்புகின்றனர். ஒரு குடும்பத்தில் மூத்தவருக்கு முன் இளையவருக்கு திருமணம் செய்யக் கூடாது என்கிறார்கள். மூத்தமகன் இறந்து விட்டால், அவருக்கு இந்த சடங்குமுறையில் திருமணத்தை நடத்திவிட்டு இளையவருக்கு திருமணம் செய்வர்.
வினோத சடங்கு
இந்தப் பண்பாட்டை பொறுத்தவரையில் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நடத்தி வைக்காத பெற்றோர் மோசமான மனிதர்களாக கருதப்படுகின்றனர். கபூசியஸ் மதமும் இதையே கூறுகிறது. இந்த சடங்குக்காக மூங்கில் குச்சிகள், காகிதம் மற்றும் துணியைக் கொண்டு உருவ பொம்மைகள் செய்யப்படுகின்றன.
இந்த பொம்மைகளை இறந்தவராக கருதி சடங்குகளை மேற்கொள்கின்றனர். சில நேரங்களில் கல்லரையில் இருந்து பிணங்கள் திருடப்பட்டும் இந்த சடங்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சடங்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே தடைசெய்யப்பட்டிருந்தாலும் சீனாவின் சில இடங்களில் இதனை இன்றும் மேற்கொள்கின்றனர்.
சிங்கப்பூர், தைவானிலும் உள்ள சீனர்கள் இதனைப் பின்பற்றுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.