ஜெபத்திற்கு வந்த ஆசிரியை; பேய் விரட்ட பாதிரியார் செய்த காரியம் - போலீசார் வழக்கு பதிவு!
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து பண மோசடியில் ஈடுபட்ட பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன உளைச்சலில் ஆசிரியை
சென்னை வேளச்சேரியை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவனை விட்டு பிரிந்து மன உளைச்சலில் இருந்த ஆசிரியை ஆலயங்களுக்கு சென்று ஜெபம் செய்து வந்துள்ளார்.
அப்போது அவருக்கு தெரிந்த பாதிரியார் ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்த ஜோஸ்வா (39) என்ற பாதிரியார் ஒருவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து ஜோஸ்வாவிடம் தனது மனரீதியிலான பிரச்சனை குறித்து போனில் பேசியுள்ளார் அந்த பெண்.
இதைக்கேட்ட ஜோஸ்வா அந்த பெண்ணை நேரில் சந்திக்க சொல்லியுள்ளார். பின்னர் தூத்துக்குடி சென்ற அந்த பெண்ணிடம், உங்களது உடம்பில் பேய் உள்ளது, அதை விரட்ட ஒன்றாக ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
பாதிரியார் மீது வழக்கு பதிவு
சில நாட்கள் கழித்து பேய் உடம்பை விட்டு போக அடம்பிடிக்கிறது, அதனால் தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து பலமுறை இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெண்ணிடம் இருந்து ரூ. 5 லட்ச வரையிலும் பணம் வாங்கியுள்ளார் ஜோஸ்வா.
மேலும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் பணத்தை திருப்பி தரும்படி பெண் கேட்டதற்கு ஜோஸ்வா தர மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண், பாதிரியார் மீது புதுக்கோட்டை போலீசில் புகாரளித்தார். இது தொடர்பாக பாதிரியார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அவரை தேடி வருகின்றனர்.