பள்ளியில் அழுதுகொண்டே புகாரளித்த சகோதரிகள்- ஓராண்டாக மிரட்டி தந்தை செய்த கொடூரம்!

Tamil nadu Coimbatore Sexual harassment
By Jiyath Oct 15, 2023 04:31 AM GMT
Report

மகள்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாலியல் வன்கொடுமை

கோவை மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு சார்பில் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பெண் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பள்ளியில் அழுதுகொண்டே புகாரளித்த சகோதரிகள்- ஓராண்டாக மிரட்டி தந்தை செய்த கொடூரம்! | Father Sexually Assaulted Daughters Arrested Kovai

அதில் மாணவிகள் யாருக்காவது பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது 13 மற்றும் 10 வயது சகோதரிகள் அழுது கொண்டே வந்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.

கடந்த ஓராண்டாகா தங்களின் தந்தை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக சிறுமிகள் கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக சிறுமிகளை அழைத்துக்கொண்டு அவர்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

சென்னை சுங்கத்துறை தேர்வில் முறைகேடு; காதில் ப்ளூடூத், இடுப்பில் சிம் - சிக்கிய 30 வடமாநிலத்தவர்!

சென்னை சுங்கத்துறை தேர்வில் முறைகேடு; காதில் ப்ளூடூத், இடுப்பில் சிம் - சிக்கிய 30 வடமாநிலத்தவர்!

தந்தை கைது

அப்போது இதனைக் கேட்டு சிறுமிகளின் தாயாரும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு சிறுமிகளின் தந்தை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பள்ளியில் அழுதுகொண்டே புகாரளித்த சகோதரிகள்- ஓராண்டாக மிரட்டி தந்தை செய்த கொடூரம்! | Father Sexually Assaulted Daughters Arrested Kovai

மேலும், விசாரணையில் தந்தை ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இந்த 2 சிறுமிகள் உள்ளனர். மனைவி வீட்டு வேலைக்கு செல்லும்போது சிறுமிகள் இருவரையும் மிரட்டி தந்தை பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் தந்தை மிரட்டியுள்ளார்.