கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் 2ம் பெரிய நகரமாக வளர்ந்த சுவாரசிய வரலாறு!
தென்னிந்தியாவின் 2வது பெரிய நகரமான கோயம்புத்தூர் உருவான வரலாறு பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டம் பல்வேறு மற்றும் துடிப்பான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, அதன் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு பல துறைகள் பங்களிக்கின்றன. இம்மாவட்டம் ஒரு வலுவான தொழில்துறை தளத்தைக் கொண்டுள்ளது, ஜவுளித் தொழில் முக்கிய துறைகளில் ஒன்றாகும்.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், மாவட்டம் பொறியியல், ஆட்டோமொபைல் மற்றும் ஐடி தொழில்கள் போன்ற பிற துறைகளில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இம்மாவட்டம் பல விவசாய மற்றும் தோட்டக்கலை நடவடிக்கைகளுக்கு தாயகமாக உள்ளது, இது உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. மாவட்டத்தில் தொழில் முனைவோர் விகிதம் அதிகமாக உள்ளது, பல தனிநபர்கள் இப்பகுதியில் தங்கள் சொந்த தொழில்களை தொடங்குகின்றனர்.
வரலாறு
கோயம்புத்தூர் மாவட்டம் பண்டைய காலம் தொட்டு கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இதன் வரலாறு சங்ககாலம் முதலே அறியப்படுகிறது. பழங்காலத்தில் இப்பகுதி பழங்குடியின வசிப்பிடமாக இருந்துள்ளது.
அவர்களில் மிகுந்த வலிமையான, பெரும்பான்மையான கோசர்கள் இன மக்கள் கோசம்புத்துர் என்னும் இடத்தை தலைமையிடமாக கொண்டு வசித்து வந்தனர். இவர்கள் வாழ்ந்த இடமான கோசம்புத்துர் காலப்போக்கில் பெயர் மருவி கோயம்புத்தூர் என்றே அழைக்கபடுகிறது.
இங்கு இராஷ்டிரகுட்டர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள், பாண்டியர்கள், டெல்லி முகலாயர்கள் போன்ற பல வழி மன்னர்கள் ஆண்டு வந்தனர்.
கலாச்சாரம்
கோயம்புத்தூர் நகரத்தின் கலாச்சாரம் இந்தியாவில் உள்ள மற்ற நகரங்களிடமிருந்து வேறுபடுகின்றது. ஒரு காசுமோபாலிட்டன் நகரமாக இருப்பதால், நகரத்தின் கலாச்சாரம் அதன் மாறுபட்ட மக்களை பிரதிபலிக்கிறது. பொதுவாக ஒரு பாரம்பரிய நகரமாக கருதப்பட்டாலும் கூட தமிழ்நாட்டிலுள்ள மற்ற நகரங்களைவிட வேறுபட்டிருக்கிறது.
பாரம்பரிய இசை, நடனம் மற்றும் தமிழ்நாட்டின் எல்லா கலை வடிவங்களும் நகரத்தில் மிகவும் பிரபலமாக உள்ளன. பண்டைய கோவில் கட்டிடக்கலையிலிருந்து நவீன உயர் கட்டிடக்கலை மற்றும் பாரம்பரிய இசை, நடனம், பாரம்பரிய உணவிலிருந்து துரித உணவுகள், இரவில் தூங்கா நகரமாக உள்ளது பாேன்ற ஒரு தனித்துவமான கலவையை இந்நகரத்தில் காணலாம். கோயம்புத்தூரும் அதன் மக்களும் தொழில்முயற்சிக்காக புகழ் பெற்றுள்ளனர்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
1799ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் முழு அளவில் கோவையை கைப்பற்றி பல்வேறு சீர்திருத்தங்களை செய்தனர். கோவை மாவட்டம் முழுவதும் பருத்தி சாகுபடிக்கு ஏற்ற கரிசல் நிலம் உள்ள பகுதியாகும். எனவே, இங்கு வெளிநாட்டு பருத்தியை விதைக்க திட்டமிடப்பட்டது. 1819ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் வியாபார அதிகாரியாக இருந்த ராபர்ட்ஹீத் என்பவர், போர்போன் என்ற பருத்தியை கோவைக்கு கொண்டுவந்து விவசாயிகளை விதைக்க வைத்தார்.
அப்போது முதல் பருத்தி உற்பத்தியும் இதை நூலாக மாற்றும் தொழிற்சாலைகளும் கோவையில் உதயமானது. இதுவே காலப்போக்கில் கோவையில் மிகப் பெரிய தொழிற்புரட்சியை உருவாக்கி, தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' என்ற பெயரை கோவைக்கு உருவாக்கி தந்தது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் முக்கிய துறைகளில் ஒன்றாகும், இப்பகுதி “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என்று குறிப்பிடப்படுகிறது.
பல ஆண்டுகளாக இப்பகுதியில் பல ஜவுளி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மாவட்டம் பருத்தி நூற்பாலைகள், நூல் உற்பத்தி அலகுகள் மற்றும் ஆடை அலகுகளுக்கு பெயர் பெற்றது. மாவட்டத்தில் ஜவுளி ஆராய்ச்சி சங்கம் (ATIRA) உள்ளது, இது ஜவுளித் தொழிலுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது.
ஏரிகள் மற்றும் குலங்கள்
கோவை நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சிங்காநல்லூர் ஏரி, குறிச்சி ஏரி, வாலாங்குளம் ஏரி, கிருஷ்ணாம்பதி ஏரி, முத்தண்ணன் ஏரி, செல்வசிந்தாமணி ஏரி, பெரியகுளம். இந்த நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன.
பறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் எனப் பல்லுயிர் ஓம்பலுக்கு, நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன. கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகஸ்ட்-அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகளை இந்த ஏரிகளில் காணலாம்.
சிறுவாணி
சிறுவாணி அருவி மற்றும் அணை தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இந்த நீர்வீழ்ச்சி கோயம்புத்தூர் நகருக்கு மேற்கே 37 கிமீ தொலைவில் சிறுவாணி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் பாய்ந்து செல்லும் சிறுவாணி நதியால் இந்த அருவி உருவாகிறது.
இந்த நதி அதன் படிக-தெளிவான நீருக்காக அறியப்படுகிறது மற்றும் உலகின் 2வது தூய்மையான குடிநீர் ஆகும். சிறுவாணி அணை 1927 இல் கட்டப்பட்டது, முதன்மையாக கோயம்புத்தூர் நகரத்திற்கு குடிநீர் வழங்குவதற்காக.
800 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த அணை அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது, இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களுக்கு பிரபலமான இடமாக உள்ளது. இந்த அணை நீர்மின்சாரத்தின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளது, இரண்டு மின் நிலையங்கள் நீர் ஓட்டத்தில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
பட்டீஸ்வரர் கோவில்
லிங்க வடிவத்தில் இங்கு இருந்த சிவபெருமானுக்கு காமதேனு தினமும் பால் வார்த்து வந்தது. இதை அறியாத கன்று, காலால் இந்த இடத்தை இடறவே, இங்கு ரத்தம் வெளிவந்தது. இதை கண்டு காமதேனு வருந்தவே, சிவபெருமான் அங்கு தோன்றி, காமதேனுவுக்கு அருள்பாலித்தார். இந்த இடமே பேரூர் பட்டீஸ்வரர் கோயிலானது.
சிவபெருமானின் பக்தரான சுந்தரர் இங்கு வரவேண்டும் என்பதற்காக, இறைவனும் சக்தியும், சாதாரண உழவர் வேடத்தில் விவசாயம் செய்து, சுந்தரரை இங்கு அழைத்து வந்ததாக பாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கோயிலுக்கு அப்பர் பெருமானும் வந்து சென்றதாக கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. பேரூர் கோயிலில் விஜயநகர பேரசின் காலத்தில் மாதையன் என்ற மன்னர் கட்டிய தெப்பக்குளம் இன்றும் காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது.
பேரூர் கோயிலின் கனகசபை மண்டபத்தில் உள்ள சிற்பங்கள் உலக பிரசித்தி பெற்றவை. கி.பி. 17 ம் நூற்றாண்டில் அழகாத்திரி நாயக்கரால் இந்த மண்டபம் கட்டப்பட்டது. அற்புதமான நடன அசைவுகளுடன் காணப்படும் இந்த சிலைகள் பேரூர் கோயிலுக்கு பெருமை சேர்க்கிறது.
ஆதியோகி சிவன் சிலை
ஆதியோகி சிலை 112 அடி (34 மீ) உயரம் கொண்டது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவால் வடிவமைக்கப்பட்டது. இது 500 டன்கள் (490 நீண்ட டன்; 550 குறுகிய டன்) கொண்ட அடித்தளத்துடன் கட்டப்பட்டது. இச்சிலை யோகா மேம்பாட்டுக்காகவும், எழுச்சிக்காகவும் கட்டமைக்கப்பட்டது. ஆதியோகி என்று பெயரிடப்பட்டது.
ஆதியோகி சிலை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழாவில் 24 பிப்ரவரி 2017 அன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் அதன் உத்தியோகபூர்வ 'இன்கிரிடிபிள் இந்தியா' பிரச்சாரத்தில் ஒரு புனிதத் தலமாக இச்சிலையை உள்ளடக்கியுள்ளது.