பெற்றோர்களே..ஒருபோதும் இந்த வார்த்தைகளை உங்க குழந்தைகளிடம் சொல்லிடாதீங்க!

India Relationship World
By Swetha Aug 10, 2024 11:00 AM GMT
Report

குழந்தைகளிடம் பெற்றோர்கள் ஒருபோதும் சொல்லகூடாத வார்த்தைகளை காணலாம்.

பெற்றோர்களே..

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை ஒழுக்கமுடன் வளர்க்க வேண்டும் என்று எண்ணுவதுண்டு. இதற்காக பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகளை எடுப்பார்கள்.

பெற்றோர்களே..ஒருபோதும் இந்த வார்த்தைகளை உங்க குழந்தைகளிடம் சொல்லிடாதீங்க! | Parents Should Never Use These Words To Your Child

ஆனால் ஒரு சில நேரங்களில் கண்டிக்கிறேன் என்ற பெயரில் கோபமாக திட்டுகிறார்கள். இது குழந்தைகளுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும்.

அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை - பள்ளியின் கண்டிஷன் - கொதித்த பெற்றோர்கள்!

அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை - பள்ளியின் கண்டிஷன் - கொதித்த பெற்றோர்கள்!

முட்டாள்

இந்த சொல்லை பலமுறை பெற்றோர்கள் குழந்தைகளைப் பார்த்து எளிதாக சொல்வதுண்டு.

பெற்றோர்களே..ஒருபோதும் இந்த வார்த்தைகளை உங்க குழந்தைகளிடம் சொல்லிடாதீங்க! | Parents Should Never Use These Words To Your Child

ஆனால் முட்டாள் என திட்டினால் குழந்தையின் மன உறுதியை விரைவில் அது குறைக்ககூடும். மற்றும் அவர்களின் தன்னம்பிக்கையும் சீர்குலைந்து விடும்.

பிறருடன் ஒப்பிடுவது

பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவார்கள். ஆனல் இது மிகவும் தவறு. இவ்வாறு தொடர்ந்து பேசுவாதால் குழந்தைகள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

பெற்றோர்களே..ஒருபோதும் இந்த வார்த்தைகளை உங்க குழந்தைகளிடம் சொல்லிடாதீங்க! | Parents Should Never Use These Words To Your Child

மன அழுத்தம், தாழ்வு மனப்பன்மை மேலும் அவர்கள் மீது வைத்திருக்கும் தன்னம்பிக்கையும் குறைய தொடர்கிறது.

உன்னால் பயன் இல்லை

குழந்தைகள் வளரும் போது புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறார்கள். அந்தசமயத்தில் அவர்கள் சரியாக ஏதாவது செய்யவில்லை என்றால் உடனே பெற்றோர்கள், உன்னால் எந்த பயனும் இல்லை என்று திட்டி விடுகிறார்கள்.

பெற்றோர்களே..ஒருபோதும் இந்த வார்த்தைகளை உங்க குழந்தைகளிடம் சொல்லிடாதீங்க! | Parents Should Never Use These Words To Your Child

இப்படி சொல்லுவதால் உங்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை பலவீனப்படுத்தும், மற்றவர்கள் முன் தாழ்ந்தவராக உணர்வார்கள்.

சாபம் அல்லது கெட்ட வார்த்தை பயன்படுத்தல்

குழந்தைகளிடம் சாபம் விடுவதோ அல்லது கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தோ செய்யாதீர்கள். இது அவர்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தும்.

பெற்றோர்களே..ஒருபோதும் இந்த வார்த்தைகளை உங்க குழந்தைகளிடம் சொல்லிடாதீங்க! | Parents Should Never Use These Words To Your Child

இந்த மாதிரி உங்களுக்கு குழந்தைகளிடம் நடந்து கொண்டால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும் மற்றும் தவறான பாதைகளுக்கு கூட செல்ல வாய்ப்பு உள்ளது.

குறை சொல்லுவது

பெற்றோர்கள் செய்யும் மிக பெரிய தப்பில் இதுவும் ஒன்று. குழந்தை குண்டாகவோ ஒல்லியாகவோ அல்லது ரொம்பவே உயரமாகவோ குள்ளமாகவோ இருப்பதை வைத்து அவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதை நிறுத்துங்கள்.

பெற்றோர்களே..ஒருபோதும் இந்த வார்த்தைகளை உங்க குழந்தைகளிடம் சொல்லிடாதீங்க! | Parents Should Never Use These Words To Your Child

இதனால் அவர்கள் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள்.