சரியாக படிக்கவில்லை.. 4 வயது குழந்தையை அடித்தே கொன்ற கொடூர பெற்றோர்!
நான்கு வயது பெண் குழந்தையை அடித்துக் கொன்று புதரில் வீசி விட்டு வந்திருக்கிறார்கள் கொடூர பெற்றோர்கள். இந்த கொடூரம் ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
கொடூர பெற்றோர்
ஜார்கண்ட் மாநிலத்தில் கிழக்கு சிங்பம் மாவட்டத்தில் வசிக்கும் தொழிலாளர் உத்தம் மெய்டி. அவரது மனைவி அஞ்சனா மஹாடோ. இந்த தம்பதியின் இரண்டாவது மகள் நான்கு வயது சிறுமி.
அந்த நான்கு வயது சிறுமி படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று சொல்லி கைகளை கட்டி வைத்து அடித்திருக்கிறார்கள். இதில் அந்த சிறுமி மயங்கி இருக்கிறது.
படிப்பில் கவனம் இல்லை
மயக்கம் அடைந்த மகளை தூக்கிச் சென்று மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து மருத்துவமனையில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு மகளின் உடலை தூக்கிச் சென்று ரயில் தண்டவாளம் அருகே இருக்கும் புதரில் வீசிவிட்டு வீடு திரும்பி இருக்கிறார்கள்.
சிறுமி கொலை
கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கிறது . இதை அடுத்து ஒரு வாரத்திற்கு பின்னர் அவர்கள் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.
அக்கம் பக்கத்தினர் எங்கே தங்களின் மகள் என்று விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கிறார்கள் . இதை அடுத்து சந்தேகத்தின் பெயரில் அக்கம் பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணை
புகாரை அடுத்து போலீசார் நேரில் வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தியதும் மகளை அடித்துக் கொன்று புதரில் வீசியதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இதை அடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களை அழைத்துச் சென்று அந்த சிறுமி வீசப்பட்ட இடத்தை காட்டச் சொல்லி இருக்கிறார்கள். அதன்படி அந்த புதரில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.
அந்த சிறுமியின் பெற்றோரிடம் மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சரியாக படிக்கவில்லை என்பதற்காக பெற்ற குழந்தையை அடித்து கொன்று அதுவும் புதரில் வீசி விட்டு வந்த கொடூர பெற்றோர்களின் செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பீர் குடிச்சா சுகர் வராதாம்..? ஆய்வு சொல்லும் சுவாரஸ்ய தகவல்!