குழந்தையை சுமந்து கொண்டு 40 கிலோமீட்டர் காடு, ஆறுகளை கடக்கும் பெண் - எதற்கு தெரியுமா?
ஜார்கண்ட் மாநிலத்தில் பெண் ஒருவர் குழந்தையை சுமந்து கொண்டு 40 கிலோமீட்டர் காடு, ஆறுகளை கடந்து கிராம மக்களுக்கு தடுப்பூசி போடும் சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்பந்த முறையில் பணியில் இருக்கும் மந்தி குமாரி என்ற பெண் எட்டு கிராமங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்த பகுதிகளை அடர்ந்த வனப்பகுதி மற்றும் ஆற்றைக் கடந்து சுமார் 35 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால்தான் அடைய முடியும்.
அங்கு தனது குழந்தையை முதுகில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடந்து பணிக்கு செல்கிறார்.இதற்கு முன்பும் இதுபோன்றுதான் பணியாற்றியுள்ளதாகவும், இப்போது பிரசவ கால விடுமுறை முடிந்து மூன்று மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தேன் என்றும் மந்தி குமாரி கூறியுள்ளார்.
மேலும் மழைக்காலம் தொடங்குவதற்குள் இந்தக் கிராமங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு அவரவர் வயதுக்கான தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.