தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்த 9 மாத பெண் குழந்தை உயிரிழப்பு..!
பல்லாவரத்தில் உள்ள தனியார் பிளே ஸ்கூலில் 9 மாத பெண் குழந்தை பாத்ரூமில் இருந்த தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீர் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை
சென்னை பல்லாவரத்தில் உள்ள பிளே ஸ்கூலில், ஏஞ்சலின் ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வருகின்றார். வழக்கம்போல் இன்றும் தனது 9 மாத மகளுடன் இன்று பள்ளிக்குச் சென்றுள்ளார்.
அப்போது அருகிலிருந்த அறையில் மகள் கவிஸ்ரீ இத்திகாவை தூங்க வைத்துவிட்டு, பாடம் எடுத்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது, குழந்தை அந்த அறையிலிருந்து அருகிலிருந்த பாத்ரூம் அறைக்கு தவழ்ந்து சென்று தண்ணீர் பாத்திரத்தில் விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் கதறி அழுது கொண்டே குழந்தை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குக்கொண்டு சென்றுள்ளார்.
அங்குக் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. அதனைத்தொடர்ந்து குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.