இனி.. பேருந்துகளில் இதற்கு அனுமதி இல்லை - தமிழக அரசு முக்கிய உத்தரவு!
தமிழக அரசு போக்குவரத்து கழகம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
லோக்சபா தேர்தல்
லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, அரசு பஸ்களில் பார்சல்களை அனுப்பும் குத்தகையை தனியார் நிறுவனம் எடுத்துள்ள நிலையில்,
கண்டக்டரிடம் கட்டணம் செலுத்தி, பார்சல்களை அனுப்பும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஆட்கள் இல்லாமலே பார்சல்களை அனுப்பும் வழக்கமும் உள்ளது.
பேருந்துகளில் கட்டுப்பாடு
ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு பஸ்களில் ஆளில்லாமல் பார்சல்களை அனுப்பக்கூடாது என்று டிரைவர், கண்டக்டர்களுக்கு, சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்குள்ளான ரொக்கப்பணத்தை தாராளமாக எடுத்து செல்லலாம்.
பறக்கும்படையினர் மறித்தால் பணத்துக்கான உரிய காரணத்தை கூறவேண்டும். ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை கொண்டு செல்லும்போது, போலீசார் தடுத்து நிறுத்தினால் அதற்கான ஆவணங்களை கட்டாயம் வழங்க வேண்டும்.
இல்லையெனில், பணம் பறிமுதல் செய்து கரூவூலத்தில் ஒப்படைக்கப்படும்.
ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.