அரசு போக்குவரத்து ஊழியர்கள் எந்தகட்சிக்கும் உதவ கூடாது: அறிக்கை விட்ட போக்குவரத்து கழகம்
government
help
transport
party
By Jon
அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணி நேரத்தில் எந்த கட்சிகும் வாக்கு சேகரிக்க கூடாது என சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அரசு போகுவரத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் இந்த தேர்தல் காலத்தில் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் வாக்கு சேகரிக்க செல்லக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தேர்தல் சமயத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவி செய்வார்கள். ஆனால் தற்போது சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அரசு ஊழியர்கள் தங்களது வாகனங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்களை பொறிக்க அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கபடும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.