அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு டார்கெட் நிர்ணயம்

Government of Tamil Nadu
By Thahir Sep 06, 2022 10:58 AM GMT
Report

அரசு போக்குவரத்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு டார்கெட் நிர்ணயம் செய்துள்ளது.

டார்கெட் நிர்ணயம் 

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 14வது ஊதிய பேச்சுவார்த்தையின் படி, அகவிலைப்படி உயர்வு காரணமாகவும், மாதத்திற்கு ரூ. 10 கோடி தேவை அதிகரித்துள்ளது.

மாதம் ரூ.3.40 கோடி பேருந்துகளில் விளம்பரங்கள் மூலமாக வருகிறது. மீதமுள்ள ரூ.6.60 கோடி பயணிகளுக்கு வழங்கப்படும் பயண டிக்கெட் மூலம் வசூலிக்க வேண்டும்.

பேருந்துகளில் முழுமையான அளவு பயணிகளை ஏற்றிச் சென்று வருவாயை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு டார்கெட் நிர்ணயம் | Target For Government Bus Drivers And Conductors

வருவயை அதிகரிக்கவும் நிதிச்சுமையை குறைக்கவும் போக்குவரத்து ஊழைியர்களுக்கு டார்கெட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனை அனைத்து மண்டல மேலாளர்களும் பின்பற்றுமாறும் உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே போக்குவரத்து கழகத்தில் பணியாற்றக்கூடிய பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.