பௌலிங் போட வந்த கோலி; வெளியேறிய பாண்டியா - வங்கதேசம் செய்த அவச்செயல்!
வங்கதேச வீரர் நசும் அஹ்மத் ஒரு அவச்செயலை செய்தார்.
ind-vs-ban
2023 உலகக் கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக போட்டியிலும் இந்தியா வென்றுள்ளது. இதுவரை 4 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது.
முன்னதாக போட்டியில் நசும் அஹ்மத் 42வது ஓவரின் முதல் பந்தை வேண்டுமென்றே வைடாக செல்லுமாறு வீசினார். அப்படி செய்தால் இந்தியா வெற்றிக்கு அருகே செல்லும்.
சதம் விளாசிய கோலி
கோலி சதம் அடிக்கும் முன்பே இந்திய அணியை வெற்றி பெற வைக்க வங்கதேசம் செய்த அவச்செயல்தான் இது. அப்போது களத்தில் இருந்த அம்பயர் அதற்கு விதிப்படி வைடு கொடுத்து இருக்க வேண்டும்.
ஆனால், அவர் கோலிக்கு சாதகமாக செயல்பட்டு வைடு கொடுக்காமல் நின்றார். அதன் பின் அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் கோலி சிக்ஸ் அடித்து தன் சதம் மற்றும் அணியின் வெற்றி இரண்டையும் தேடி தந்தார். அடுத்த அணி பேட்ஸ்மேன் சாதனையை தடுப்பது அவச்செயலாகவே பார்க்கப்படுகிறது.

அந்த கேப்டன்களை மாதிரி இல்ல ரோஹித் சர்மா - முன்னாள் வீரர் கருத்தால் விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி!
இதற்கிடையில், ஆட்டத்தின் 9வது ஓவரில் முதல் 3 பந்துகளை வீசிய ஹர்திக் பாண்டியா, தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியாத நிலையில், அந்த ஓவரின் மீதமுள்ள 3 பந்துகளை விராட் கோலி வீசினார். ஒருநாள் போட்டிகளில் சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின் கோலி பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.