INDvsBAN: அந்த வீரர் மட்டும் இறங்கினா.. வங்கதேசம் அவ்வளவுதான் - பலவீனமே அதுதான்!
வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆடவுள்ளது.
INDvsBAN
2019 உலகக்கோப்பையில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் பும்ரா 4 விக்கெட்கள் வீழ்த்தினார். அப்போது இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா நான்கு போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிராக ஆடி உள்ளது. அந்த நான்கில் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா தான் வங்கதேச அணியின் பெரிய பலவீனம்.
பலவீனம்
அந்த நான்கு போட்டிகளிலும் பும்ரா இந்திய அணியில் இடம் பெறவில்லை. பும்ராவின் யார்க்கர்கள் வங்கதேச அணிக்கு பெரிய பிரச்சனையாக உள்ளது.
இந்திய அணி இந்தப் போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுடன், ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவையும் பயன்படுத்தி வங்கதேச அணிக்கு எதிராக வேகப் பந்துவீச்சால் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.