நாட்டுக்காக விளையாடனும், சொந்த சாதனைக்கு விளையாடினா இப்படிதான் - விளாசிய கவுதம் கம்பீர்

Babar Azam Gautam Gambhir ICC World Cup 2023
By Sumathi Oct 17, 2023 04:58 AM GMT
Report

பாபர் அசாமை இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

கவுதம் கம்பீர் 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், 12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 3-வது வெற்றியை பதிவு செய்தது.

நாட்டுக்காக விளையாடனும், சொந்த சாதனைக்கு விளையாடினா இப்படிதான் - விளாசிய கவுதம் கம்பீர் | Gautam Gambhir Picks Pakistan Captain Babar Azam

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், "பாபர் அசாம் மெதுவாக விளையாடினார். பொதுவாக 2 பேட்ஸ்மேன்கள் ஒரே மாதிரி விளையாடி பார்ட்னர்ஷிப் அமைக்காமல் ஒருவர் அடித்து ஆட வேண்டும்.

விமர்சனம்

ஒருவேளை நீங்கள் உங்களுடைய சொந்த சாதனைக்காக விளையாடினால் இது போன்ற முடிவுகள்தான் கிடைக்கும். குறிப்பாக பாபர் அசாம் பொதுவாக நிறைய ரன்களை தனக்காக அடிக்கிறார்.

நாட்டுக்காக விளையாடனும், சொந்த சாதனைக்கு விளையாடினா இப்படிதான் - விளாசிய கவுதம் கம்பீர் | Gautam Gambhir Picks Pakistan Captain Babar Azam

ஆனால் பாகிஸ்தான் வரலாற்றில் எப்போதுமே ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை பெறுவதையே விரும்புவார்கள்.

என்ன கொன்னுருவேனு மிரட்டுராங்க - கவுதம் கம்பீர் கதறல்: ரசிகர்கள் அதிர்ச்சி!

என்ன கொன்னுருவேனு மிரட்டுராங்க - கவுதம் கம்பீர் கதறல்: ரசிகர்கள் அதிர்ச்சி!

அதை ஷாஹித் அப்ரிடி, இம்ரான் நசீர் ஆகியோர் மிடில் ஆர்டரில் அப்படியே எடுத்துச் செல்வார்கள். ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணியில் டாப் 3 இடங்களில் ஒருவர் கூட அதிரடியாக விளையாட முயற்சிக்கவில்லை" என விமர்சித்துள்ளார்.