அந்த கேப்டன்களை மாதிரி இல்ல ரோஹித் சர்மா - முன்னாள் வீரர் கருத்தால் விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி!
ரோஹித் சர்மா குறித்து மும்பை முன்னாள் வீரர் அமோல் முசும்தார் பேசியுள்ளார்.
அமோல் முசும்தார்
மும்பை அளவிலான போட்டிகளில் ரோஹித் சர்மாவுக்கு கேப்டனாக இருந்தவர் அமோல் முசும்தார். இந்நிலையில் அவர் குறித்து பேசுகையில்,
"ரோஹித் சர்மா 2011 உலகக்கோப்பை தொடரில் அணியில் இடம் பெறாமல் போன போது அவர் கடினமாக உழைத்து பின் அணியில் சேர்ந்தார். அவரது கேப்டன்சி பாணி மற்றவர்களிடமிருந்து சற்று வித்தியாசமானது.
ரசிகர்கள் அதிருப்தி
அவர் தனது வீரர்களுடன் மிகவும் பணிவாகவும் மிகவும் அன்பாகவும் பேசுகிறார், அனைத்து விஷயங்களையும் மிக எளிதாகவும் எளிமையாகவும் வைத்திருப்பார்” எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில், விராட் கோலி கேப்டனாக இருந்த போது அணியில் பல கட்டுப்பாடுகள் இருந்தன. உடற்தகுதி தேர்வில் இத்தனை மதிப்பெண் பெறவில்லை என்றால் அணியில் இடம் இல்லை என்றெல்லாம் அப்போது பரபரப்பாக பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.
எனவே, அன்மோல் முசும்தார் வேண்டுமென்றே கோலியை சீண்டும் வகையில் இப்படி ஒரு கருத்தை கூறியிருப்பதாக விராட் கோலி ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.