'எங்களுக்கு உலக கோப்பையை விட பும்ராதான் மிக முக்கியம்' - கேப்டன் ரோஹித் சர்மா உருக்கம்...!
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் இன்று முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
பும்ரா விலகல்
பிசிசிஐ தன் டுவிட்டர் பக்கத்தில், பும்ராவிற்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. இது இந்திய கிரிக்கெட் அணியின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
எங்களுக்கு பும்ரா தான் முக்கியம் - ரோஹித் சர்மா
நேற்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நிருபர்கள் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து ரோகித் சர்மா பேசுகையில் -
பும்ராவின் காயம் குறித்து நாங்கள் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை செய்தோம். ஆனால் யாரும் திருப்திகரமான பதிலை கொடுக்கவில்லை. இந்த உலக கோப்பை போட்டி முக்கியமானது தான்.ஆனால் அதை விட எங்களுக்கு அவரது கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் முக்கியம்.
தற்போது அவருக்கு வயது 27-28 தான் ஆகிறது. அவர் இன்னும் நிறைய கிரிக்கெட்டில் போட்டியில் கலந்து கொண்டு விளையாட வேண்டும். காயத்துடன் அவரை உலக கோப்பை போட்டியில் விளையாட வைப்பது மிகவும் 'ரிஸ்க்'.
இந்திய அணிக்காக மேலும் பல போட்டிகளில் விளையாடி வெற்றி தேடித்தருவார். அவர் அணியில் இல்லாதது எங்களுக்கு பெரும் இழப்பு தான் என்று தெரிவித்தார்.