இலவச பஸ்சில் பயணிக்கும் பெண்கள்.. ஓசி டிக்கெட், சாதி என்ன?.. அவமதிக்கும் ஆட்சி - பழனிச்சாமி கண்டனம்!

ADMK DMK Edappadi K. Palaniswami
By Vinothini Nov 26, 2023 06:05 AM GMT
Report

பிங்க் பஸ்சில் பயணிக்கும் பெண்களை திமுக அவமதிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். n

அறிக்கை

பெண்களுக்கு நகர பஸ்களில், கட்டணமில்லா சேவை வழங்கப்படும் என, அரசு அறிவித்தது. அதன்பின் பெரும்பாலான சாதாரண பஸ்களை, விரைவு நகர பஸ்கள், சொகுசு பஸ்கள் என மாற்றிவிட்டு, சாதாரண பஸ்களின் ஓட்டத்தை குறைத்து விட்டது. அலுவலக நேரத்தில், 'பிங்க்' நிற பஸ்கள் அதிகப்படியாக இயக்காததால், பெண்கள் மற்ற பஸ்களில், கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலைமை உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி

பிங்க் நிற பஸ்களில் பயணம் செய்யும் பெண்களை, 'ஓசி டிக்கெட்' என அவமரியாதையாக, கண்டக்டர் முதல், அமைச்சர் வரை அழைத்த நிகழ்வுகள் என, தி.மு.க., அரசு மீது, பெண்கள் வைத்த குட்டுகள் அதிகம்".

முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பிய டிஜிபி - 7 பிரிவுகளில் வழக்கு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றி அவதூறு பரப்பிய டிஜிபி - 7 பிரிவுகளில் வழக்கு!

சாதி

இந்நிலையில், "கட்டணமில்லா பஸ் பயணம் மேற்கொள்ளும் பெண்களிடம், அவர்களுடைய பெயர், வயது, மொபைல் எண், சாதி போன்ற 15 விவரங்களை அந்த பஸ் நடத்துநர்கள் விசாரித்து, போக்குவரத்துத் துறை வழங்கியுள்ள படிவங்களில் சேகரிக்க தி.மு.க அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தள்ளன. இதனால், நடத்துனருக்கும், பெண்களுக்கும் இடையே தகராறுகள் ஏற்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எடப்பாடி பழனிச்சாமி

பெண்களிடம், அவர்கள் பெயர், வயது, மொபைல் எண் கேட்பது, அவர்களின் தனி உரிமையில் தலையிடுவதாகும். மொபைல் எண் வாங்கும் போது, அருகில் உள்ளவர்களும், அவர்களின் மொபைல் எண்ணை குறிப்பெடுக்க வாய்ப்புள்ளது.

இதன் வழியே ஒரு சில கண்டக்டர்கள், மொபைல் எண் குறிப்பெடுத்த போது, அருகில் இருந்தவர்கள், அப்பெண்களிடம் பேச முயற்சிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இவை அனைத்தையும் விட, பெண்களிடம் நீங்கள் என்ன ஜாதி என, கண்டக்டர்கள் கேட்பது, மிகுந்த கண்டனத்துக்கு உரியது. உடனடியாக இதுபோன்ற புள்ளி விபரங்களை சேகரிக்கும் பணிக்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.