ஏழை பெண்களை குறிவைக்கும் கரு முட்டை MAFIA
ஈரோடு மாநகரத்தில் சமீப காலமாக மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக செயற்கை கரூவூட்டல் மையங்கள் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் கிளைகளை ஈரோட்டில் திறந்து வருகின்றன.
சோதனைக்குழாய் குழந்தைகளை வெற்றிகரமாக உருவாக்குவதில் பிரசித்தி பெற்ற மருத்துவ நிபுணர்கள் ஈரோட்டில் உள்ளனர். எனவே இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குழந்தைபேறு வேண்டும் தம்பதிகள் ஈரோட்டை நோக்கி வருவது அதிகரித்து உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில வருடங்களாகவே சட்டவிரோதமாக கருமுட்டைகளை தானமாகவே பெறும் அவலம் அரங்கேறி வரும் நிலையில் சட்ட விரோத கருமுட்டை விற்பனை விவகாரம் தமிழக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இந்த நிலையில் இந்த சம்பவங்களால் பாதிக்கப்ட்ட பெண்ணிடம் ஐபிசி தமிழ் நடத்திய நேர்காணல் உங்களுக்காக