14 ஏக்கரில் அரண்மனை; வாழும் மன்னர் குடும்பம் - அதுவும் சென்னையில்..!

Chennai
By Sumathi Mar 27, 2024 10:37 AM GMT
Report

சென்னையில் அமைந்துள்ள அரண்மனைகள் குறித்து பார்க்கலாம்.

 அமீர் மஹால் 

சென்னையில் முக்கிய பகுதியாக இருக்கும் ராயப்பேட்டையில் 14 ஏக்கரில் ஒரு பெரிய அரண்மனை உள்ளது. இங்கு தற்போதும் மன்னர் குடும்பத்தினரின் வம்சாவழியினர் வசித்து வருகின்றனர்.

அமீர் மஹால்

கடற்கரை அருகில் அமைந்துள்ள சேப்பாக்கத்தில் தான் ஆற்காடு நவாப்பின் அரண்மனை அமைக்கப்பட்டு இருந்தது. ஆற்காடு நவாப் அங்கு தான் வாழ்ந்து வந்தார். அவரது ஆட்சியை 1855ல் ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர். அதன்பின், திருவல்லிக்கேணி பிரதான சாலையில் ஷாதி மஹால் என்ற சிறிய இடத்தில் அவரது குடும்பம் வாழ்ந்து வந்தனர்.

இந்தியப் பயணிகளுக்கு பிடித்த நாடு எது தெரியுமா? இவ்வளவு பேர் விசாவுக்கு ட்ரை பண்றாங்கலா?

இந்தியப் பயணிகளுக்கு பிடித்த நாடு எது தெரியுமா? இவ்வளவு பேர் விசாவுக்கு ட்ரை பண்றாங்கலா?

சேப்பாக்கம் அரண்மனை

தொடர்ந்து, ஆங்கிலேயர்களுடனான நல்ல உடன்படுக்கையில் ஆற்காடு நவாப் இருந்ததால், ராயப்பேட்டையில் இருக்கும் அமீர் மஹால் என்ற பெரிய அரண்மனையை அளித்தனர். தற்போதைய ஆற்காடு நவாப்பின் மன்னராக முகமது அப்துல் அலி நவாப் உள்ளார்.

chepauk palace

அவரின் குடும்பத்துடன் அமீர் மஹால் அரண்மனையில் வசித்து வருகின்றனர். இதற்கிடையில், சேப்பாக்கம் அரண்மனை தமிழ்நாடு அரசின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.