இந்தியப் பயணிகளுக்கு பிடித்த நாடு எது தெரியுமா? இவ்வளவு பேர் விசாவுக்கு ட்ரை பண்றாங்கலா?

Tourism France Tourist Visa
By Sumathi May 17, 2023 08:08 AM GMT
Report

சுற்றுலா செல்வதில் இந்தியர்களின் விருப்பமான நாடாக பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது.

இந்தியர்களின் விருப்பம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இங்கு சுற்றுலா மற்றும் தொழில் ரீதியான பயணம் மேற்கொள்ள 90 நாட்களுக்கான ஷெங்கன் விசா வழங்கப்படுகிறது.

இந்தியப் பயணிகளுக்கு பிடித்த நாடு எது தெரியுமா? இவ்வளவு பேர் விசாவுக்கு ட்ரை பண்றாங்கலா? | France Is Favorite Country Of Indian Travelers

கடந்த 2022-ல் ஷெங்கன் விசா கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

பிரான்ஸ்

6 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக பிரான்ஸுக்கு சுற்றுலா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சுவிட்சர்லாந்து செல்ல 1.06 லட்சம் பேர், ஸ்பெயினுக்கு செல்ல 80,098 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்தியப் பயணிகளுக்கு பிடித்த நாடு எது தெரியுமா? இவ்வளவு பேர் விசாவுக்கு ட்ரை பண்றாங்கலா? | France Is Favorite Country Of Indian Travelers

ஆனால், பிரான்ஸ் சுமார் 20% இந்தியர்களின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் மற்ற நாடுகளில் இருந்து சராசரியாக 82 மில்லியன் பார்வையாளர்கள் வருவதால், பிரான்ஸ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

நாட்டின் சுத்திகரிக்கப்பட்ட பாரம்பரியம், சுவையான உணவு வகைகள், அரச அரண்மனைகள் மற்றும் பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் காரணமாக உலகின் அனைத்து மூலைகளிலிருந்தும் பார்வையாளர்கள் பிரான்சுக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.