பஞ்சு மெத்தையில் ஃபீல்டிங் பயிற்சி; அடிபடகூடாதாம்.. அணியை விளாசும் ரசிகர்கள்!
பாகிஸ்தான் அணி வீரர்கள் பஞ்சு மெத்தையில் ஃபீல்டிங் பயிற்சி மேற்கொண்ட சம்பவம் கேலிக்குள்ளாகியுள்ளது.
பாகிஸ்தான் அணி
டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இன்னும் 6 மாதங்களில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படவுள்ளது.
இதனால் பாகிஸ்தான் அணியில் மாற்றத்தை கொண்டு வர அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, கராச்சியில் உள்ள ராணுவ முகாமில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஃபீல்டிங் பயிற்சி
பாகிஸ்தான் ஃபீல்டிங் பயிற்சியாளர் மஸ்ரூர், வீரர்களுக்கு ஃபீல்டிங் பயிற்சி அளித்துள்ளார். அதில் ஸ்லிப் ஃபீல்டிங்கிற்காக கொடுக்கப்பட்ட பயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள் பஞ்சு மெத்தையை பயன்படுத்தியுள்ளனர்.
Imam-ul-Haq and others having special fielding drills with coach @Masroor173 in Pre Season Fitness Camp in Karachi pic.twitter.com/zL9qrwGVba
— Shahzaib Ali ?? (@DSBcricket) July 2, 2024
தரையில் கீழே விழுந்தால் உடலில் காயம் ஏற்படும் என்பதால், பஞ்சு மெத்தையில் தாவி விழுந்து ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தனால் பாகிஸ்தான் வீரர்களை அந்நாட்டு ரசிகர்களே கிண்டல் செய்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.