சாம்பியன்ஸ் டிராபி ஜெயிக்குறதெல்லாம் இருக்கட்டும்; பாகிஸ்தான் வருவீங்களா? சல்மான் பட் கேள்வி!
இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்க தயாராக இருக்கிறதா என முன்னாள் வீரர் சல்மான் பட் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்திய அணி
17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை மீண்டும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக ஐசிசி தொடர்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடித்த அணிகள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க தகுதிபெற்றுள்ளன. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் பேசுகையில்,
சல்மான் பட் கேள்வி
டி20 உலகக்கோப்பை வெற்றியால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணிக்கும் என்று ஜெய் ஷா சிக்னல் கொடுத்துவிட்டதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் எனக்கு தெரிந்து ஜெய் ஷா எந்த சிக்னலையும் கொடுக்கவில்லை. அவரிடம் இருந்து பாசிட்டிவ் சிக்னல் கொடுக்கப்பட்டாலும், எனக்கு எந்த ஆர்வமும் வராது.
ஏனென்றால் அது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பணியல்ல. அது ஐசிசியின் பணியாகும். இந்திய அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாட வந்தால், நிச்சயம் வரவேற்போம்.
ஒருவேளை வரவில்லை என்றால், ஐசிசி தான் நடவடிக்கை எடுக்கும். இதன் மூலமாக ஐசிசி யாருக்கு சாதகமாக இருக்கிறது, எவ்வளவு நடுநிலையுடன் உள்ளது என்பதும் தெரிந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.