இதுவே போதும்...ரொம்ப பெரிய தொல்லை - விராட் கோலியின் திட்டம்!! தூக்கி எறிந்த பிசிசிஐ!!
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி,அணியின் கேப்டனாக இருந்த போது கொண்டு வந்த யோயோ டெஸ்ட் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது.
யோயோ டெஸ்ட்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் இடம்பெற கடுமையான உடற்தகுதி டெஸ்ட் ஒன்றை வீரர்கள் பாஸ் செய்யவேண்டி இருந்தது. அது யோயோ டெஸ்ட். அணிக்கு கேப்டனாக இருந்த போது, இந்த fitness டெஸ்ட் முறையை கட்டாயமாக்கினார் விராட் கோலி.
இதனால் பல சர்ச்சைகளும் எழுந்தன. அணியில் இருந்து 2019-ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் நீக்கப்பட்டதும், உலகக்கோப்பை 2019 அணியின் தேர்வின் போது ரோகித் சர்மா அணியில் இல்லை என்ற சர்ச்சைகளுக்கெல்லாம் பிள்ளையார் சுழி இந்த யோயோ டெஸ்ட்.
பல விமர்சனங்களை பெற்ற இந்த யோயோ டெஸ்ட் இனி முழுவதுமாக அணி தேர்வில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. விராட் கோலி டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில், இது நடைமுறைக்கு வந்துள்ளது.
இனி இல்லை
இனி யோயோ டெஸ்ட் பதிலாக மற்ற சில நடைமுறைகள் அணி தேர்வில் இடம்பெறுகின்றன. அதாவது வீரர் ஒருவர் fitness'ஆக இருப்பது மட்டுமின்றி அவர் காயங்கள் இன்றியும் இருப்பது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. அதற்காக 12 முதல் 16 வாரங்களுக்கு ஒரு முறை வீரர்களுக்கு சில பரிசோதனைகள் நடைபெறும்.
அதில் தேர்ச்சி பெற்றால் அணியில் இடம் கிடைக்கும். இடையில் அணி வீரர்கள் திடீரென மாற்றப்படமாட்டார்கள். அதே போல, ஒரு வீரரின் செயல்பாட்டுத் திறனை பரிசோதிக்க ஆறு வாரங்களுக்கு ஒரு முறையும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஒரே தொடரை வைத்து முடிவெடுப்பது இனி கட்டாயமாக இருக்காது. இதனை தொடர்ந்து, ஒரு வீரர் காயம் அடையாமல் தடுக்க இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும் பரிசோதனைகள் நடப்படவுள்ளன.