ஃபைனலில் ஆட்டநாயகன் விராட் கோலிக்கு தகுதி இல்லை - சரவெடியை வெடிக்கும் முன்னாள் வீரர்
இந்திய அணி நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி இறுதி போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
விராட் கோலி
இந்திய டி20 அணியில் விராட் கோலி இடம் பெற்றது அணி தேர்வு போதே பெறும் விமர்சனங்களை பெற்றது. அவருக்கு பதிலாக அணியில் இளம் வீரருக்கு இடம் வேண்டும் என பலரும் வலியுறுத்தினார்கள்.
அதற்கு வலுசேர்க்கும் வகையில் விராட், தொடர்ந்து இறுதி போட்டி வரை சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார். அநேக தரப்பில் இருந்து விமர்சனங்கள் வந்தது.
ஆனால், அனைத்திற்கும் தனது பேட்டால் பதிலடி கொடுத்தார் விராட்.நெருக்கடியான நிலையில், அனுபவத்தை வெளிக்காட்டி 59 பந்துகளில் 6 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து 76 ரன்களை குவித்தார்.
இந்திய அணி கோப்பையை வெற்றி பெற்ற நிலையில், ஆட்டநாயகன் விருதை பெற்றார் விராட். கிரிக்கெட்ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சிரேக்கர் இதனை விமர்சித்திருக்கிறார்.
தகுதி இல்லை
அவர் இது குறித்து பேசும் போது, அவர், விராட் கோலி அதிக பந்துகளை எடுத்துக்கொண்டதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியா குறைவான பந்துகளை விளையாடினார்.
விராட் கோலியின் மெதுவான ஆட்டத்தின் மூலம் இந்தியா நெருக்கடிக்கு தள்ளப்பட்டது என நினைக்கிறன். பவுலர்கள் சரியாக ஆடவில்லை என்றால் நிச்சயம் நான் சொல்வது சரியாக இருந்திருக்கும்.
தோற்கும் நிலை கூட ஏற்பட்டிருக்கும். பவுலர்கள் ஆட்டத்தை மட்டுமின்றி, விராட் கோலியையும் சேர்த்து காப்பாற்றி விட்டார்கள்.
பாதி இன்னிங்ஸ் மேல் விளையாடிய விராட், 128 தான் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார். நான் நிச்சயமாக பவுலருக்கு தான் ஆட்ட நாயகன் விருதை அளித்திருப்பேன்.