கம்பீரின் மறைமுக நெருக்கடி - சைலெண்டாக ஓய்வு அறிவித்த வீரர்கள்! போட்டுடைத்த ரோகித்
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக பதவியேற்கவுள்ளார் கவுதம் கம்பீர்.
கவுதம் கம்பீர்
ஆனால், நேர்காணலின் போதே கம்பீர் அதிரடியாக பல கோரிக்கைகளை வைத்ததாக கூறப்படுகிறது. அதாவது இந்திய டெஸ்ட், ஒரு நாள், டி20 என தனி தனி அணிகளும், சிறிய அணிகளுடன் விளையாடினால் அதற்கான ஒரு அணியும் இருக்கவேண்டும் என்றெல்லாம் கோரிக்கை வைத்ததாக தகவல் உள்ளது.
ஆனால், அவை யாவுமே உறுதிப்படுத்தப்பட்ட தகவல் அல்ல. அதே நேரத்தில் கோப்பையை வென்றவுடன் இந்திய அணி சீனியர் வீரர்களான ரோகித், விராட், ஜடேஜா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்து விட்டார்கள்.
நெருக்கடி
ஓய்வு குறித்து பேசும் போது, ரோகித் தற்போது இதற்கான நெருக்கடி இருப்பதாக கூறினார். அதுவே தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது கம்பீர் வரும் நெருக்கடியை தான் அவர் மறைமுக கூறுகிறார் என்ற யுகங்கள் அதிகரித்துவிட்டன .
ரோகித் சொன்னதற்கு வேறு கரணங்கள் இருந்தாலும், சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதங்கள் துவங்கிவிட்டது. தலைமை பயிற்சியாளர் ஒதுக்குவதை விட நாமலே அணியில் இருந்து விலகி கொள்ளலாம் என்ற முடிவில் அவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.