நிறைய பண்ணிட்டாங்க...ஓய்வை அறிவித்த ரோகித் - ஜடேஜா!! கம்பீர் கருத்து
விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வு குறித்து கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஓய்வு
இந்திய அணி 17 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பை டி20 கோப்பையை தனதாகியுள்ளது. உலக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மற்றும் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் தங்களது ஓய்வை அறிவித்துள்ளார்கள்.
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் என எண்ணப்படும் கவுதம் கம்பீர் இவர்களை குறித்து பேசியுள்ளார்.
நிறைய செஞ்சிட்டாங்க
அவர், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இதனை விட சரியான தருணம் இருக்காது. இருவருமே சிறந்த வீரர்கள். அணிக்காக நிறைய செய்துள்ளார்கள். டெஸ்ட் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளார்கள்.
இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார் கவுதம் கம்பீர்.
விராட் - ரோகித் சர்மாவை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.