Thank you S.I.R - விடைபெற்ற ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா!!
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஜடேஜா
இந்தியாவின் முக்கிய ஆல் ரவுண்டரான ஜடேஜா, அனைத்து வகை கிரிக்கெட் விளையாட்டிலும் தனி முத்திரையை பதித்துள்ளார். அவர், இந்த உலககோப்பையில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், அவர் அணியில் இருந்து எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது ரசிகர்களுக்கு தெரியும்.
பேட்டிங், பௌலிங், பில்ட்டிங் என அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்பட்டு தேவையான நேரத்தில் இந்திய அணியை கரைசேர்த்துள்ளார் ஜடேஜா. சீனியர் வீரர்களில் அனைத்து வகை பார்மட்டில் விளையாடும் வரும் வீரர்களும் ஒருவராகவே திகழ்ந்தார் ஜடேஜா
ஓய்வு
இந்த நிலையில் தான், SIR என புகழப்படும் ரவீந்திர ஜடேஜாவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமான ஜடேஜா இதுவரை 74 போட்டிகளில் 515 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 46. அதேபோல 4 மைடன் ஓவர்களை வீசியுள்ள அவர், மொத்தமாக 54 விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார். 3/15 அவரின் சிறப்பான பந்துவீச்சு. அதே நேரத்தில் 24 கேட்ச், 10 ரன் அவுட்டும் செய்துள்ளார் ஜடேஜா.
இந்திய அணி உலகக்கோப்பையை வென்றவுடன் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரை தொடர்ந்து தற்போது இவரும் பட்டியலில் இணைந்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஜடேஜா, இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன். உறுதியான குதிரையைப் போல பெருமையுடன் துள்ளிக் குதிப்பது போல, நான் எப்போதும் எனது நாட்டிற்காக எனது சிறந்ததைக் கொடுத்துள்ளேன், மற்ற வடிவங்களிலும் அதைத் தொடர்ந்து செய்வேன்,.
“டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு நனவாகும், இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி. ஜெய் ஹிந்த்.”