ஒப்புக்கு சப்பாணியாக அணியில் இருக்கும் சிஎஸ்கே ஆல் ரவுண்டர் - கழட்டிவிடும் முனைப்பில் ரோகித்?

Ravindra Jadeja Rohit Sharma Indian Cricket Team
By Karthick Jun 16, 2024 11:29 AM GMT
Report

இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, ஆப்கனிஸ்தான் அணிகளுடனும், இன்னும் தகுதி பெறாத மற்றொரு அணியுடனும் விளையாடவுள்ளது. இது வரை விளையாடிய 4 போட்டிகளில் 3'இல் வெற்றி ஒரு முடிவில்லை என்ற நிலையில் இருக்கும் இந்தியாவிற்கு பெரிய சிக்கலாக ஆஸ்திரேலியா அணி அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஒப்புக்கு சப்பாணியாக அணியில் இருக்கும் சிஎஸ்கே ஆல் ரவுண்டர் - கழட்டிவிடும் முனைப்பில் ரோகித்? | Jadeja Drop World Cp T20 India Team Rohit Sharma

அதே போல, திடீரென ஆப்கனிஸ்தான் அணியும் ஏதாவது ஒரு பெரிய அதிர்ச்சியை இந்தியாவிற்கு அளிக்கலாம். ஆகையால் இந்திய அணி கவனமாக விளையாட வேண்டி வரும். விளையாடிய 3 போட்டியையும் இந்தியா நியூயார்க் நகரில் தான் விளையாடியது. இனி ஆடுகளங்களும் மாறுகின்றன.

இந்தியாவின் பிரச்சனை!! இது கூட உங்கக்கிட்ட இல்லையே..எதுக்கு உலகக்கோப்பை - கடுப்பான முன்னாள் வீரர்!!

இந்தியாவின் பிரச்சனை!! இது கூட உங்கக்கிட்ட இல்லையே..எதுக்கு உலகக்கோப்பை - கடுப்பான முன்னாள் வீரர்!!


ஆகையால், அதற்கேற்ப திட்டங்களை இந்தியா அமைத்திட வேண்டியிருக்கும். இந்தியாவின் முக்கிய ஆல் ரவுண்டரான ஜடேஜா, இதுவரை 3 போட்டிகளிலும் ஒரு பங்களிப்பும் தரவில்லை. ஒரு ரன் இல்லை, ஒரு விக்கெட் இல்லை அவ்வளவு என ஒரு கேட்ச் கூட அவர் பிடிக்கவில்லை.

ஒப்புக்கு சப்பாணியாக அணியில் இருக்கும் சிஎஸ்கே ஆல் ரவுண்டர் - கழட்டிவிடும் முனைப்பில் ரோகித்? | Jadeja Drop World Cp T20 India Team Rohit Sharma

சமூகவலைத்தளங்களில் அவர் ஓரம்கட்டப்படுவார் என்ற கருத்துக்கள் வைரலான நிலையிலும், அடுத்து இந்தியா எதிர்கொள்ளவிற்கும் சூப்பர் 8 சுற்று மிகவும் முக்கியமானதாகும்.

Jadeja world cup t20 2024

அதன் அடிப்படையில் ஜடேஜாவின் அனுபவம் அணிக்கு இன்றியமையாத ஒன்றாகும். அதன் காரணமாக, அவர் நீடிப்பதில் சிக்கல் இருக்காது. மேலும், நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஜடேஜா. ஆகையால் அவரை ரோகித் நிச்சயமாக பயன்படுத்திக்கொள்வார் என்றே ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.