இந்தியாவின் பிரச்சனை!! இது கூட உங்கக்கிட்ட இல்லையே..எதுக்கு உலகக்கோப்பை - கடுப்பான முன்னாள் வீரர்!!
நடந்து வரும் உலகக்கோப்பை தொடர் மழையின் காரணமாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றது.
உலகக்கோப்பை டி20
உலகக்கோப்பை இது வரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியையே கொடுத்துள்ளது. தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும் பாகிஸ்தான் அணி அடுத்து சுற்றிற்கு முன்னேறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பை கொண்ட ஆட்டமான அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
இதன் காரணமாக, பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. மழை பிரச்சனை கடுமையாக உள்ளது இந்த உலகக்கோப்பையில். இந்தியா கனடா ஆட்டங்களுக்கும் மழையின் காரணமாக கைவிடப்பட்டது.
போட்டி நேரத்தின் போது மழை இல்லை என்றாலும், மழையின் காரணமாக ஆடுகளத்தில் அதிகபட்ச நீர் தேங்கி நின்றிருந்த காரணத்தால், போட்டி கைவிடப்பட்டன. இது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
உலகக்கோப்பையை நடத்தும் ஐசிசி'யிடம் முறையான திட்டமிடல் கூட இல்லையா? என பல ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். அந்த வரிசையில் இந்தியாவை சேர்ந்த முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
அவர் பேசியது வருமாறு, முழு ஆடுகளத் மூடுவதற்கு கவர் இல்லை என்றால் உலகக் கோப்பையே நடத்த வேண்டாமே என அவர் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் அணி வெளியேறியதால், சமூகவலைத்தளத்தில் இது தொடர்பான விவாதங்கள் அதிகரித்து ஐசிசி மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.