பாபர் அசாமை அவருடன் ஒப்பிடுவதா? தொகுப்பாளரை அடிக்க பாய்ந்த ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங் தொகுப்பாளரை அடிக்க பாய்ந்த சம்பவம் வைரலாகி வருகிறது.
ஹர்பஜன் சிங் செயல்
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. சூப்பர் 8 சுற்றில் கூட தகுதி பெற முடியாத நிலையில் பாகிஸ்தான் வெளியேறியது.
பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான நிலைக்கு பாபர் அசாமின் கேப்டன்சியும் பேட்டிங் திறனும் தான் காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தற்போது இரண்டு விஷயங்களை கூறி இதில் எது பிடிக்கும் என்று கேள்வி கேட்கப்படுகிறது.
ரசிகர்கள் வேதனை
அந்த வகையில், ஹர்பஜன் சிங்கிடம் பிரையன் லாரா சிறந்தவரா இல்லை குமாரசங்ககாரா சிறந்தவரா என்று கேட்கப்பட்டது. அதற்கு பிரையன் லாரா என்று பதிலளித்தார். தொடர்ந்து பிரையன் லாரா சிறந்தவரா இல்லை பாபர் அசாம் சிறந்தவரா என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதனைக் கேட்டதும் ஹர்பஜன் சிங் டென்ஷன் ஆகி எழுந்து நின்று கீழே இருந்து ஏதோ பொருளை எடுத்து அடிப்பது போல் செய்தார். பின் சுதாரித்துக் கொண்ட ஹர்பஜன்சிங் அதை காமெடியாக மாற்றுகிறேன் என அங்கு இருந்த பழங்களை எடுத்து தொகுப்பாளரிடம் கொடுத்து உங்களுக்கு சிறந்த அறிவு இருக்கிறது எனத் தெரிவித்தார்.
இவரது இந்த செயல் பாகிஸ்தான் ரசிகர்களை வேதனை அடைய செய்துள்ளது. மேலும், பாபர் அசாமை பிரையன் லாராவுடன் ஒப்பிடுவது சரி கிடையாது என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.